நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 25 டிசம்பர், 2015

அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்…

நத்தார்தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்த இணையங்களின் நல்  வாழ்த்துக்கள் இந்த ஆண்டும் நத்தார்தினத்தை கொண்டாடும் அனைவரையும் வாழ்த்தி நிற்கும் நேரம் வாழ்வில் சிறப்பான காலம் வருடத்தில் ஓர்முறை உறவுகளும் உற்றாரும் கூடிமகிழும்காலம், இதனை சிறப்பாக  எல்லா நாடுகளிலும் கொண்டாப் படுகின்றது, அதை மகிழ்வோடு  வரவேற்று நிற்கும்  நாம் இறைவனை நினைத்து இல்லாதோருக்கு உதவி இன்நாளில் மகிழ்ந்திருப்போம் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி...

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்கத் தயார்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கருத்து வெளியிட்டார். பல ஆண்டுகளில் இல்லாத, மிகவும் மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்காக அரசு தயார்நிலையில் உள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்...

வெள்ளி, 18 டிசம்பர், 2015

அமெரிக்கா தைவானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஆயுத விற்பனை சீனா போர்க்கொடி!!!

சீனாவும், தைவானும் பரம எதிரிகளாக உள்ளன. தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் தைவானுக்கு அமெரிக்கா 1.83 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 261 கோடி) ஆயுத விற்பனை செய்கிறது. இது தொடர்பான அறிவிப்பினை வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகம்  வெளியிட்டுள்ளது தைவானுக்கு அமெரிக்கா 2 போர்க்கப்பல்கள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ‘டவ் 2 பி’ பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது சீனாவுக்கு...

வெள்ளி, 11 டிசம்பர், 2015

புதிய சுற்றுலா அறிவுறுத்தலை பிரித்தானியா வெளியிட்டுள்ளது?

இலங்கைக்கான புதிய சுற்றுலா அறிவுறுத்தலில் பிரித்தானிய தமிழ் குழுக்களின் தடைநீக்கலையும் சுட்டிக்காட்டியுள்ளது. அதில் பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இரண்டு குழுக்களின் தடை இலங்கையில் நீக்கப்பட்டுள்ளமை  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 20ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தலில் பிரித்தானிய தமிழ் பேரவை மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடைநீக்கத்தை தமது சுற்றுலா அறிவித்தலில் பிரித்தானிய  வரவேற்றுள்ளது. இலங்கை...

புதன், 9 டிசம்பர், 2015

விபத்துகுள்ளன பெண் பாதசாரி பலி!!

பிரம்ரனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்த பெண் பாதசாரி ஒருவர் 08,12,2015,செவ்வாய்கிழமை அதிகாலை உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 48 வயதான அந்த பெண்மணி கடந்த திங்கட்கிழமை பின்னிரவு வேளையில் பிரம்ரனில் உள்ள கார்கள் கழுவும் இடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு காயமடைந்திருந்தார் என பீல் பிராந்தியக் காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து நேர்ந்ததை அடுத்து Williams Parkwayக்கு அருகில் 9499 விமான நிலைய வீதியில்...

வருங்கால அதிநவீன வளர்ச்சி இப்படி தான் இருக்குமோ!

தற்சமயம் உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பார்த்தால் வியப்பாக தான் இருக்கும். அதிலும் மொபைல்களை பற்றி சொல்லவா வேண்டும் அதனுடய வளர்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும். உலகம் வளர்ச்சியடைவதை விட மொபைல்கள் தான் அதிக அளவில் வளர்ச்சி அடைகின்றது. அந்த காலத்தில் ஒரு கடிதமோ அல்லது பணம் அனுப்புவதற்கு அதிக நாட்கள் ஆகும். தொலை பேசி என்றாலே பெரிய அளவில் கருதுவார்கள். இந்த விடியோவில் சமார்ட் காட், நியுஸ் பேப்பர் அதுபோல தொழில்நுட்பங்களை காணலாம் அனால்...

செவ்வாய், 8 டிசம்பர், 2015

பனிமலை உருகும் அபாயம் எவரெஸ்ட் சிகரம் வெப்பமடைவதால்!!!

எவரெஸ்ட் சிகரம் வெப்பமடைவதால் பனிமலைகள் உருகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஹுனான் பல்கலைக்கழகத்தின் சீன அறிவியல் அகாடமியும், குயோ மோ லாக்மா பனிசிறுத்தை சரணாலய மையமும் இணைந்து ஆய்வை நடத்தியது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றமே எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எவரெஸ்ட் பனிமலை உருகி அதன் அளவு சுருங்கி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக...