நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 23 டிசம்பர், 2017

வாழ்நாளில் விளையாட்டுத்துறையில் அதிகமாக சம்பாதித்த வீரர்கள்

விளையாட்டுத்துறையில் வாழ்நாளில் அதிகமாக சம்பாதித்த வீரர்களின் பட்டியலை அமெரிக்காவை தலைமையிடமாக  கொண்டு இயங்கும் பிரபல சஞ்சீகையொன்று வெளியிட்டுள்ளது.இதில் கூடைப்பந்தாட்டம், கோல்ப் விளையாட்டு , கார் பந்தயம், கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, டென்னிஸ், அடிப்பந்தாட்டம் (பேஸ் போல்) ஆகிய விளையாட்டில் அதிகம் சம்பாதித்த 20 வீரர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.இதில், 1.85 பில்லியன்  டொலர்களுடன் முன்னாள் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல்...

திங்கள், 18 டிசம்பர், 2017

புதிய முயற்சியில் சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் பி.எம்.டபிள்யூ!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய  தொழில்முயற்சியானது  ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை...

புதன், 13 டிசம்பர், 2017

துவைக்காத தலையணையை பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

    ஐந்து  வருடங்கள்  துவைக்காத தலையணையை பயன்படுத்திய சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் கண் இமையில் 100 ஒட்டுண்ணிகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.Ms Xu  என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக கண் அரிப்பு பிரச்சனையால்  பாதிக்கப்பட்டுள்ளார். இவரது கண்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.இதனைத்தொடர்ந்து  மருத்துவரிடம் சென்றுள்ளார். இவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கண் இமையில் 100 ஓட்டுண்ணிகள்...

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அணு ஆயுதப்போரை கொரியத் தீபகற்பத்தில் தவிர்க்க முடியாதது’ பெரும் பரபரப்பு!!

வடகொரியா சமீபத்தில், அமெரிக்காவின் பிரதான பகுதிகளை தாக்குகிற வல்லமை கொண்ட ஏவுகணையை ஏவி சோதித்தது. மேலும், தன்னைத்தானே அணு ஆயுத நாடாகவும், ஏவுகணை நாடாகவும் அறிவித்துக்கொண்டது.அதைத் தொடர்ந்து 230 போர் விமானங்களுடன் கூடிய கூட்டு போர் பயிற்சியை அமெரிக்காவும்,  தென்கொரியாவும் மேற்கொள்ள, அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உயர்  அதிகாரி ஜெப்ரி பெல்ட்மேன்,...

சனி, 25 நவம்பர், 2017

ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம்

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்திருக்கிறார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர். மேலும்   குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ...

திங்கள், 20 நவம்பர், 2017

ஜேர்மனியில் ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு தடை!

நாட்டின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுவதால் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு ஜேர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது.ஜேர்மனியில் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்சுகள் அதிகளவில் உபயோகப்படுத்தபடுகின்றன.முக்கியமாக 5-லிருந்து 12 வயதுடைய குழந்தைகளை இவை குறிவைக்கின்றன. இவ்வகை வாட்சுகளில் சிம் கார்டு கூட பொருத்தமுடியும், ஆப்ஸ் மூலம் தங்கள் குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களை கண்காணிக்கவே, உரையாடவோ  பெற்றோரால் முடியும். இது...

வெள்ளி, 27 அக்டோபர், 2017

நீங்கள் பிரிட்ஜில் முட்டை வைத்து சாப்பிடாதீங்க: தீமைகள் இதோ

 .அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மிகுந்த குளிர்ச்சியான இடத்தில் வைத்து முட்டையை பராமரிக்கும் போது, அது பால் போல் திரிந்து கெட்டு போய்விடும். பிரிட்ஜில் வைத்த முட்டையின் தீமைகள்? முட்டையில் ஓடுகளில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா உருவாகும். இவை பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கும். முட்டை ஓட்டில் இருக்கும் சால்மோனெல்லா...

பிரித்தானியவில் வதை முகாம் இலகுவில் எவரும் செல்ல முடியாத தீவு

ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள். ஆனால் , அவர்கள் போல்ஷ்விக்குகளுடன்  (ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்) சண்டையிடவும், அவர்களை சிறையிலடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த வகையில் ரஷ்ய மண்ணில் அவர்கள் முதல் சித்திரவதை முகாமை தொடங்கினர். அந்த இடம்தான் ‘மரணத் தீவு’ என அழைக்கப்படுகின்றது.நெருங்கிச்...

வியாழன், 28 செப்டம்பர், 2017

குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸ்

அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸும் இணைந்துள்ளது ரெண்ட் கேப் என்னும் ஓன்லைன் வலைதள நிறுவனம் $1,500 வாடகைக்கு எவ்வளவு சதுர அடி கொண்ட அடுக்குமாடி  வீடுகள் உலகின் முக்கிய நகரங்களில் தரப்படுகிறது என்ற ஆய்வை நடத்தியது. இதில் பிரான்ஸின் பாரீஸ் நகரம் 25வது இடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 30m² இடம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் கிடைப்பதாக தெரியவந்துள்ளது இந்த பட்டியலில்...

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கத்தியால் மனநல மருத்துவரை குத்திக் கொன்ற நோயாளி

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டியை நோயாளி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த அச்சுதா ரெட்டி, அமெரிக்காவில் குடியேறி மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் நடத்தி வந்த கிளினிக்கில் யோகப் பயிற்சிகள் மூலம் மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் அவர் நோயாளி ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட...

மரக்கறிகள் வீதியில் விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

பிலிப்பைன்ஸில் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பாடசாலையில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார். பொருளாதார சிக்கலால் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும்...

புதன், 13 செப்டம்பர், 2017

பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தில் தவகல்கள் திருடிட்டு!

பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர் 44 மில்லியன் மக்களின் தவகல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் போது பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்களினதும் தகவல் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம்  வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த...

திங்கள், 11 செப்டம்பர், 2017

பேனா மூலம் இலண்டன் பல்கலைக் கழகத்தில் பரீட்சை எழுதத் தடை

இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 800 ஆண்டுகள் பழைமை கொண்டது.  இங்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி  பயில்கின்றனர். இப் பல்கலைக்கழத்தில் பரீட்சைகள் வினாத்தாள்களில் பேனா மூலம் கைகளினால் எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்சமயம் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மாணவர்களது...

ஈராக்கில் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பிணமான இளைஞன்

ஈராக்கில் இளைஞரொருவர் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் நொடி பொழுதில் வீதியில் விழுந்து பிணமான சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிசிரிவி வீடியோவில், வீதியில் வரும் தன் நண்பரின் காருக்கு அருகே சென்ற இளைஞன், காருக்குள் இருக்கும் நண்பரிடம் குனிந்து கண்ணாடி வழியாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஏதோ வானத்திலிருந்து இளைஞரின் தலை உச்சியில் பாய, வீதியில் சரிந்த இளைஞர் எந்தவித அசைவில்லாமல் கிடக்கிறார். இதை...

சனி, 9 செப்டம்பர், 2017

இலங்கை தமிழ் இளைஞன் கனடாவில் குத்திக் கொலை

கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர்,  பலனின்றி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு...

புரூஸ் லீ மனைவியின் துரோகத்தால் மாண்ட வெளியான உண்மைகள!

உலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம்  என்பது இன்னமும் மர்மமாகவே  இருந்து வருகிறது. ஆனாலும் அவரது மரணம் குறித்த இரகசியக் குறிப்புக்கள் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கை மூலம் கசிந்துள்ளது. அதன்படி அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்பதே அதன் முக்கிய குறிப்பாகும். இந்தக் காெலைக்கு முக்கியமான காரணம் அவரது மனைவி என்பது தான் பேரதிா்ச்சிக்குரிய விடயமாகும். அன்று...

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இலங்கை யுவதியின் மனிதாபிமான செயற்பாடுக்கு நியூசிலாந்தில் பாராட்டு

நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற யுவதி தலைமுடியை, தானமாக  வழங்கியுள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த அரிய செயற்பாட்டை விதுஜனா செய்துள்ளார். அகதி அந்தஸ்து கோரி நியூசிலாந்தில் குடியேறி விதுஜனா, பட்டப்படிப்பை  படித்து வருகிறார். இந்நிலையில் தனது இளம் வயதில் தனது நீண்ட தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார்....

திங்கள், 4 செப்டம்பர், 2017

புலம்பெயர் மாணவி.ஜெ.அபிராமி சிறுவர் இனிய வாழ்வு இல்லத்திற்கு அன்பளிப்பு

 இலண்டன் புலம்பெயர் 13 வயதான மாணவி அபிராமி ஜெகதீசன்  சிறிது சிறிதாக   சேமித்த ஐம்பது ஆயிரம்(50000.00) ரூபாவை ஈழத்து வன்னியின் மாற்றுத் திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு  இல்லத்திற்கு அளித்தார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அபிராமி அண்மையில் தாயகம் வந்தபோது தனது அன்பினை இவ்விதம் வெளிப்படுத்தினார். இப்பணத்தை அவர் சில மாதங்களாக சிறுகச்சிறுக சேமித்தமை  குறிப்பிடத்தக்கது இளம் வயதில் இவர் காருண்ணியம் பாராட்டுக்குரியது...

பிராங்க்பேர்ட் நகரின் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதன் பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப்...

சனி, 26 ஆகஸ்ட், 2017

ஹார்வி புயல்' அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்துமாம்

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளதால் அது கரையை கடக்கும் போது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாயுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ்  கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ...

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பேஸ்புக் திடீரென பல நாடுகளில் திடீர் முடக்கம்?

சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சினை குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...