நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 29 ஆகஸ்ட், 2018

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி உருவாக்கியுள்ளார்

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார். வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் இருக்கை மற்றும் கைபிடி சக்கரங்கள் என அனைத்துமே மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மர சைக்கிளை 30, 000 தருவதாக கூறி, வியாபாரிகள் முன்வந்து கேட்டும் தான் விற்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு...

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுப்பு இலங்கை அகதி தற்கொலை

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லதம்பி வசந்தகுமார் (வயது 45) என்ற 4 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நவுறு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்து, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் சில...

பிரிட்டனில் ரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்: கொலை

பிரிட்டனின் Birmingham அருகே Solihull பகுதியில் உள்ள சாலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தாயும், மகளும் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 22 மற்றும் 49 வயதுடைய தாய், மகள் இறந்த நிலையில் கிடப்பதை உறுதி செய்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு ஆண்...

வதிவிடஅனுமதிப்பத்திரத்தைக்தை பிரான்சில் கோருவதற்கான வழிகள்

பிரான்சில் பல ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் பலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், இன்னொருவருடைய வதிவிட உரிமைப் பத்திரத்தில் களவாக வேலை செய்து வருகின்றனர். இனி, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஒத்துழைப்பு சான்றிதழ் (Attestation de Concordance) என்பதை விளங்கிக் கொள்வதனூடாக பல வருடங்களாக இன்னொருவருடைய வதிவிட உரிமைப்...

புதன், 15 ஆகஸ்ட், 2018

பாலம் இடிந்து இத்தாலியில் பலர் உயிரிழப்பு

இத்தாலியின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்த விபத்தில் இதுவரை 26 பேர் பலியானதாகவும், 15 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பல எண்ணிக்கையிலான வாகனங்கள் 45 மீட்டர் உயரத்தில்  இருந்து கீழே வீழ்ந்துள்ளன இதுவரை 12 பேரை காணவில்லை என்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அபயக் குரல்கள்...