நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தினால் கிராமத்திற்குள் நுழைந்த பனிக்கரடிகள்

ரஷ்யாவில் பருவநிலை மாற்றத்தால் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50இற்க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து 
செய்யப்பட்டுள்ளதோடு, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், பொது இடங்கள் குடியிருப்பு வாசிகளைக் கரடிகள் தாக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரிர்காப்பியில் கரடிகள் பாதுகாப்பு
 திட்டத்தின் தலைவராக இருக்கும் டட்யானா மினென்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தக் கிராமத்துக்குள் சுமார் 56 கரடிகள் நுழைந்துள்ளன.
 பெரிய மற்றும் சிறிய கரடிகளும், பெண் கரடிகளும் அதன் குட்டிகளும் அதில் அடங்கும். பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகக் காணப்படுகிறன’ தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிர்காப்பி 
என்னும் இடத்திலிருந்து
 சுமார் 2.2கிமீ தூரத்தில் உள்ள கேப் என்ற இடத்தில் கரடிகள் வசிக்கின்றன ஆனால் அந்த இடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சிலர், ரிர்காப்பி கிராமத்திற்கு பனிக்கரடிகள் வருவது
 தொடர்கதையான ஒன்று எனவே அங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக