நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 9 டிசம்பர், 2019

கைநழுவிப் போன ரஷ்யாவின் உலகக் கிண்ண, ஒலிம்பிக் கனவு

2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது.சுவிட்சர்லாந்தின் லொசேன் 
நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு
 நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து
 கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள பீபால உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கை நழுவிப் போயுள்ளது.எனவே, டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ண 
போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது. அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது.இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக