நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 19 செப்டம்பர், 2015

செப்டம்பர் 28-ம் திகதி உலக அழிவு என்கிறாா்கள் ரத்த சிவப்பில் நிலா .!!

அமெரிக்கர்கள் கூறுகிறர்கள் ? ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது! 
அமெரிக்காவின் 
உட்டா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட நம்பிக்கைவாதிகள் பலரும், வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா, விண்கற்கள் பூமி மீது விழக் காரணமாக அமைந்துவிடும் என தீவிரமாக நம்புகின்றனர்.
மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர், அழிவின்போது தேவைப்படுமே.., என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ என்பவர் எழுதிய புத்தகங்களின் குறிப்புகளைக் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளி தொடர்பான ஆராய்சியாளர்கள் செப்டம்பர் 28-ம் திகதி தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலவால் அழிவு எதுவும் ஏற்படப் போவதில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளனர். நாசாவும் விண்கற்கள் விழும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.!

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



புதன், 16 செப்டம்பர், 2015

இரண்டு வயது சிறுமி கடத்தல் : அதிர்ச்சியில் உயிரைவிட்ட தந்தை?

கனடாவின் Alberta பகுதியில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 2 வயது சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Alberta மாகாணத்தின் Blairmore பகுதியில் வீட்டில் இருந்த 2 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக பொலிசாருக்கு தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், குழந்தை Hailey Blanchette வை மீட்க முடியாமல் திணறினர்.

இறுதியில் குழந்தையை கடத்தியவர்கள் குறித்த போதிய தகவல்கள் ஏதுமின்றி தேடுதலைத் தொடர்ந்த பொலிசாரால் குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் போனது.

இதனிடையே புறநகர் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை Hailey Blanchette வின் உடலை பொலிசார் மீட்டனர்.

முன்னதாக வீட்டில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை குறித்த தகவல்கள் ஏதும் அறியமுடியாததில் மனமுடைந்த தந்தை Terry Blanchette தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே குழந்தையின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடும்பத்தினர் ஒவ்வொன்றாய் வரத்துவங்கினர்.

இந்நிலையில் Blairmore பகுதியில் இருந்து சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார்,
அந்த நபர் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட
 மறுத்துள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






திங்கள், 14 செப்டம்பர், 2015

மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மூன்று வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, ஜெனிவாவிற்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்ஹ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் ஐ.நா மாநாட்டிற்கு இம்முறை கலந்துக்கொள்ளவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்ட் ராட் செய்ட் அல் உஷைனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரை நிகழ்த்தவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மீண்டும் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளக விசாரணை குறித்த ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கையும் இன்று அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இருவிடயங்களும் இலங்கை தொடர்பில் முக்கிய விடயங்களாக காணப்படுவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணை அறிக்கை இலங்கை பிரதிநிதிகளினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அது மிகச் சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த மனித உரிமைகள் ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டாது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின்போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விளக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வயிற்றில் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள்

அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் வந்த பெண்ணின் வயிற்றில் 400 கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து அரபு எமிரேட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் துபாய் வழியாக ஹைதராபாத்துக்கு நேற்று வந்துள்ளது.
அதில் பயணித்த மூசா (32) என்ற பெண்ணுக்கு விமானத்தில் வரும்போதே கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியதும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரது வயிற்றை ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் சிறிய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து 4 சிறிய வகை பாக்கெட்டுகளில் 400 கிராம் கொண்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள ‘பிரவுன் சுகர்’ என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்றும், அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்படும் என்றும் 
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

எம்மவர் கோன் திரைப்படம் வெளியிடப்படுகிறது (29.08.2015)

கனடா மொன்றியல் எம்மவர் முழு நிளத்திரைப்படம் வெளியாக உள்ளது அதன் அழை தயாரிப்பாளரால் விடப்பட்டுள்ளது அன்பார்ந்த கனடா வாழ் தமிழ் மக்களே Jena K Siva இயக்கிய திரைப்படம் KONN திரையிடல் எதிர்வரும் Saturday August 29th,2015 at 9:00pm at Decari cinema. உங்கள் அனைவரது ஆதரவும் “Konn” திரைப்படத்திற்கு கிடைக்கும் என நம்புகின்றோம்.அந்த அழைப்புக்காணொளியை இங்கே காணலாம்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 26 ஆகஸ்ட், 2015

இளவரசராக மாற ஆசைப்பட்ட வாலிபர்: வீதியில் உலா வந்த விநோதம் (காணொளி இணைப்பு)

 
அமெரிக்க வாலிபர் ஒருவர், பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் போன்று ஆடையணிந்து அதனை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன் ஜோர்ஜ் ஆவார்.

ஊடகங்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தது இவர் மட்டுமல்ல, இவர் அணியும் ஆடைகளும் தான். பிரித்தானியாவின் ஜிக்பு என்ற பத்திரிகை, சிறந்த ஆடையணியும் ஆணாக இளவரசர் ஜோர்ஜை 49வது இடத்தில் தெரிவு செய்தது.

இந்நிலையில், இவரது ஆடைகளால் கவரப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மேக்ஸ் க்னோப்லாச்(23) என்பவர், ஜோர்ஜ் போன்று ஒருவாரத்திற்கு ஆடையணிந்து இளவரசராக நியூயோர்க் நகரில் உலா வந்துள்ளார்.

ஆனால், ஜோர்ஜ் போன்ற ஆடைகள் கிடைக்காவிட்டாலும், ஏறத்தாழ அதே மாதிரியான ஆடைகளை அணிந்துகொண்ட இவர், அதனை காணொளி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மேக்ஸ் கூறியதாவது, இளவரசரை போன்று வாழ முயற்சிசெய்வதும் ஜாலியாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வாலிபர் நிர்வாணபடுத்தப்பட்டு தாக்கபட்டார்???

மங்களூர் மார்க்கெட்டில் இந்து மத பெண் பெண் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்த  இஸ்லாமிய வாலிபர் ஒருவர் நிர்வாணபடுத்தப்பட்டு  கைகள் கட்டபட்டு கடுமையாக தாக்கபட்டார்.  
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சமபவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.லோக்கல் டெலிவிஷன் சேனல் இதனை படம் பிடித்தனர்.  வாலிபரை தாக்கிய பஜ்ரங் தள தொண்டர்கள் 14 பேர் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கபட்ட மனிதர் அங்குள்ள ஒரு கடையின் மானேஜர் ஆவார். அந்த பெண் அதே கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். 
இது குறித்து பாதிக்கபட்டவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில் அந்த பெண் சம்பள முன்பணமாக ரூ.2 ஆயிரம் கேட்டு உள்ளார்.நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றோம் அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதாக கூறினார்.அந்த பெண்  எந்த வித பாதிப்பும் இல்லாமல் தப்பி விட்டார் அந்த பெண்ணிற்கு பாதுகாப்புக்காக வந்த நான்  தண்டிக்கபட்டு உள்ளேன்.என கூறினார்.
கடந்த காலங்களில் பஜ்ரங்க்தளம்,ஸ்ரீராம சேனா, இந்து ஜகரன வேடிக்கி  மற்றும் இஸ்லாமிய குழுக்கள்  பாப்புலர் பிரண்ட் அப் இந்தியா,ஆகியவை மங்களூர், உடுப்பி, ஹொன்னவர, பதக்கல்,கார்வார் ஆகிய பகுதிகளில் மோதி கொண்டுள்ளன.
கர்நாடகாவில் 2008 முதல் 2013 பாரதீய ஜனதா ஆட்சியின் போது இந்து குழுக்கள்  பல குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்  சாட்டி உள்ளனர்.எனினும் இன்னும் இது போன்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வில்லை என தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>