மங்களூர் மார்க்கெட்டில் இந்து மத பெண் பெண் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த இஸ்லாமிய வாலிபர் ஒருவர் நிர்வாணபடுத்தப்பட்டு கைகள் கட்டபட்டு கடுமையாக தாக்கபட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சமபவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.லோக்கல் டெலிவிஷன் சேனல் இதனை படம் பிடித்தனர். வாலிபரை தாக்கிய பஜ்ரங் தள தொண்டர்கள் 14 பேர் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கபட்ட மனிதர் அங்குள்ள ஒரு கடையின் மானேஜர் ஆவார். அந்த பெண் அதே கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.
இது குறித்து பாதிக்கபட்டவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில் அந்த பெண் சம்பள முன்பணமாக ரூ.2 ஆயிரம் கேட்டு உள்ளார்.நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றோம் அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதாக கூறினார்.அந்த பெண் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தப்பி விட்டார் அந்த பெண்ணிற்கு பாதுகாப்புக்காக வந்த நான் தண்டிக்கபட்டு உள்ளேன்.என கூறினார்.
கடந்த காலங்களில் பஜ்ரங்க்தளம்,ஸ்ரீராம சேனா, இந்து ஜகரன வேடிக்கி மற்றும் இஸ்லாமிய குழுக்கள் பாப்புலர் பிரண்ட் அப் இந்தியா,ஆகியவை மங்களூர், உடுப்பி, ஹொன்னவர, பதக்கல்,கார்வார் ஆகிய பகுதிகளில் மோதி கொண்டுள்ளன.
கர்நாடகாவில் 2008 முதல் 2013 பாரதீய ஜனதா ஆட்சியின் போது இந்து குழுக்கள் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.எனினும் இன்னும் இது போன்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட வில்லை என தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக