நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பாலியல் சித்ரவதை செய்து குதிரையை குத்தி கொன்ற மர்ம நபர்:???

பிரித்தானிய நாட்டில் பெண் குதிரை ஒன்றை பாலியல் சித்ரவதை செய்து கொடூரமாக குத்தி கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்கொட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷைர் நகரை சேர்ந்த சோ ரைட் என்ற பெண்மணி வசித்து வருகிறார்.

குதிரைகள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், பிளேஸ் எனப் பெயரிடப்பட்ட ஒரு பெண் குதிரையை கடந்த 18 ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் திகதி இரவு வேளையில், அவரது பண்ணைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் வந்துள்ளான். பின்னர், அங்கு கட்டப்பட்டு இருந்த குதிரைக்கு பாலியல் ரீதியில் சித்ரவதை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த மர்ம நபர் குதிரையின் மார்பில் சரமாரியாக கத்தியால் குத்தியதில் குதிரை மயங்கியுள்ளது.

மறுநாள் காலையில், தனது குதிரை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த சோ ரைட் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், தன்னுடைய குதிரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால், குதிரை உரிமையாளர்கள் தங்களது குதிரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த பெண் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.

குதிரையை கொன்ற நபரை கண்டுபிடிக்கும் முயற்சிக்காக அவருக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் 1000 பவுண்ட் நிதியை வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய New Pitsligo நகர பொலிசார், பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து குற்றவாளியை தேடி வருவதாகவும், குதிரையை கொடூரமாக கொன்று மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த மர்ம நபர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக