நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிமாக நிறுத்தம்

ஜம்முவில்- காஷ்மீர் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில்சமீபத்தில், 
கடும் மழை பெய்து வருகின்றது. பலத்த மழை காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது.
இந்த நிலச்சரிவு குறித்து, ஜம்மு போக்குவரத்துக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் கோட்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உதம்பூர் மாவட்டத்தின் கேரி பகுதியில் கடும் மழை
 காரணமாக, கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பாதுகாப்பு கருதி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக 
நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு அடிவார முகாமிலும், அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. சாலை சீரமைப்புக்கு பின்பு, அமர்நாத் யாத்திரைக்கு 
அனுமதி வழங்கப்படும் என்றார்.
நிலாவரை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக