நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதனை பாங்காக் போலீஸாரும், மீட்புப் படையினரும் தெரிவிக்க, அரசு தரப்பும் உறுதி செய்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை 27 என்று வேறு சில அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன, காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று மாலை 6.30 மணியளவில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பெருமளவில் கோயிலுக்கு வந்திருந்த நேரத்தில் மோட்டார்சைக்கிள் வாகனத்திலிருந்து குண்டு வெடித்தது.
முதல் குண்டு கோயில் வளாகத்தினுள் இருந்தது. இரண்டாவது குண்டு வளாகத்துக்கு எதிர்ப்புறம் இருந்தது.
“இப்போதைக்கு கூற முடிவதெல்லாம் மோட்டார்சைக்கிள் குண்டு வெடித்தது இதில் பலர் பலியாகியுள்ளனர், விவரங்களை இப்போதைக்கு என்னால் தெரிவிக்கவியலாது” என்று தாய்லாந்து உயர் போலீஸ் அதிகாரி அங்சானனந்த் என்பவர் தெரிவித்தார்.
இதில் 12 பேர் பலியாகியுள்ளனர், 78  பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்புப் பகுதியில் இருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், மனித உடல் பாகங்களும் ரத்தம் தோய்ந்த சதைகளும் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்ததாக தெரிவித்துள்ளது. 2-வது குண்டு வெடிக்கலாம் என்ற சந்தேகம் எழ அங்கு பரப்பரப்பு கூடியது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்த இந்த நாசவேலை செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிண்ட்லோம் மாவட்டத்தில் புகழ்பெற்ற எரவான் என்ற இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப்பயணிகள், குறிப்பாக கிழக்காசிய பயணிகள் வருவது வழக்கம், உள்ளூர் தாய்லாந்து வாசிகளுக்கும் பிடித்தமான ஒரு தலம் இது. இது இந்துக் கடவுள் பிரம்மாவுக்கான கோயில் என்றாலும் தினசரி ஆயிரக்கணக்கான பவுத்தர்களும் இங்கு வழிபாடு செய்ய வருகின்றனர்.
பாங்காக்கின் வணிகவீதியில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களுக்கு இடையே பிரம்மா கோயிலுக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக