நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உங்கள் நாட்டை முதலில் திருத்துங்கள்”:ஒபாமாவிற்கு பதிலடி???

ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்று உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு கென்யா மற்றும் எத்தியோபிய இளைஞர்கள் சூடான கேள்விகள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதிபர் ஒபாமாவின் தந்தை பிறந்த நாடான கென்யாவிற்கு ஒபாமா சில தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
ஒபாமாவின் உரையில், ஆப்பிரிக்க மக்கள் மீது தனக்குள்ள அன்பு மற்றும் மனித உரிமைகளை பற்றி ஒபாமா உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
கென்யாவில் உள்ள நைய்ரோபியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒபாமாவின் உரை அந்நாட்டு மக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒபாமாவின் உரை குறித்து பேசிய Shiferaw Tilahun(31) என்ற நபர், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு மற்றவர்கள் பிரச்சனைகள் குறித்து தான் விவாதிக்க விரும்புவார்களே தவிர அவர்களுடைய பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதில்லை.
இன்று முதல் அமெரிக்காவில் குடியேறியுள்ள கருப்பின மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
Teresa Mbagaya(28) என்ற பெண் கூறுகையில், ஆப்பிரிக்க 
மக்களுக்கு ஒபாமா அறிவுரை கூறுவதற்கு முன் தன்னுடைய நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு பிறகு அவர் எங்களை பற்றி அவர் கவலை கொள்ளட்டும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Alifie Amalia(37) என்ற பெண் கூறுகையில், கென்யாவில் இருக்கும் துப்பாக்கி வன்முறையை விட அமெரிக்காவில் தினந்தோறும் நிகழும் துப்பாக்கி சூடு எங்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது என்றார்.
பள்ளி, தேவாலயம் என காணும் இடத்தில் எல்லாம் கருப்பின மக்களாகிய எங்கள் சகோதர, சகோதரிகளை சுட்டு கொல்லும் அந்த வன்முறையை தீர்த்து விட்டு பிறகு ஆப்பிரிக்க நாடுகள் மீது அமெரிக்கா கவனம் செலுத்தட்டும் என அவர் காரசாரமாக பதில் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக