நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 23 அக்டோபர், 2019

பேரதிர்ச்சி தரும் செய்தி உலக மக்களின் மாபெரும் கலைக்களஞ்சியத்திற்கு மூடுவிழா

சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.அரிய பல தகவல்களை
 தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால், தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.வரலாற்றுக் காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் 
வெளிவந்தன.
ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தொகுப்புகளாக வெளியான இந்த புத்தகங்களின் மூலம் நாம் அறிய விரும்பிய தகவல்கள் அனைத்தையும் விளக்கப்படங்களுடன் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.ஆனால், இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்களை கொண்டதாகவும் முழு தொகுப்பும் பல நூறு டொலர்கள் விலையிலும் இருந்ததால் ஏழை-எளியவர்களால் இவற்றை பெற்று பயனடைய முடியாத நிலை ஏற்பட்டது.என்சைக்லோப்பீடியா
 புத்தக தொகுப்பு
எனினும், முக்கிய நூலகங்களில் ‘குறிப்புதவி நூல்கள்’ என்ற பகுதியில் இவை வைக்கப்பட்டிருந்தன. சாதாரண மக்களால் இந்த புத்தகங்களை சொந்தமாக்கி கொள்ள இயலாமல் போனாலும் தேவையான குறிப்புகளை பெற ‘என்சைக்லோப்பீடியா’ தொகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.சில ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட 
பதிப்புகளாக வெளியாகும் ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகங்களில் முந்தைய பதிப்புக்கு பிறகு நடைபெற்ற மேலும் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.நாளடைவில் உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி அபாரமான வளர்ச்சியை அடைந்தது. கணிணி, மின்னணு எழுத்தியல் முறை அதிகரித்தது. இந்தநிலையில், இணையத்தளத்தின் பயன்பாடு 
தவிர்க்க முடியாத அம்சமாக மாறியது.எழுத்துகளாக அச்சுக்கோர்த்து, மையால் காகிதத்தில் அச்சிட்டு புத்தகமாக தயாரித்து விற்பனை செய்த காலம் மாறி, இணையத்தின் வழியாக மின்னணு முறையில் கணிணியில் புத்தகங்களின் பக்கங்களை காணும் நிலை உருவானது.இவ்வாறு சில தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடக்கும் நிலையை
 மாற்றி அனைத்து தகவல்களையும் கலைக்களஞ்சியமாக ஒரே இடத்தில் குவியலாக படைக்கும் எண்ணம் அமெரிக்காவை
 சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் என்பவருக்கு தோன்றியது.இதன் விளைவாக ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகத் தொகுப்புகளைப்போல் இணையத்தளத்தின் வாயிலாக ஓர் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்தார்.விக்கிப்பீடியா’ என்ற பெயருடன் 15-1-2001 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையவழி அறிவுச்சேவைக்கு இன்று 18 வயதாகின்றது.

ஜிம்மி வேல்ஸ்

தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ’விக்கிப்பீடியா’ நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் பிரதான ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை.உலகின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இந்த ’விக்கிப்பீடியா’ இணையப்பக்கத்தில் தனித்தனி தலைப்புடன் பதிவு செய்கின்றனர்.
இந்த தகவல் திரட்டுகளை எல்லாம் பாதுகாப்பதற்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகளை விலைகொடுத்து பெறுவதற்கும், தகவல் திரட்டுகளை எல்லாம் எண்மாண கோப்புகளாக சேகரித்து, பாதுகாத்து சர்வர்களின் மூலம் பயனாளிகளுக்கு அளிப்பதற்கும் ஏராளமான பணம் தேவைப்பட்டாலும் வர்த்தக நோக்கம் ஏதுமின்றி, பயனாளிகளின் அறிவுப்பசிக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இங்கு இலவசமாகவே கிடைத்து வருகின்றன.இந்நிலையில், சில தகவல்களை தேடி விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்லும் வாசகர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சில விக்கிப்பீடியா பக்கங்களின் முகப்பில் ஒரு விண்ணப்பம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.அனைத்து வாசகர்களும் அறிவது.., விக்கிப்பீடியாவின் சுதந்திரத்தை நீங்கள் பாதுகாத்து நிலைநாட்ட ஆண்டுக்கு ஆயிரம் டொலர் என்ற அளவில் உங்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், 99 சதவீதம் பேர் அப்படி தருவதில்லை.

என்சைக்லோப்பீடியா புத்தகத்தின் உள்பக்கங்கள்
இதை வாசிக்கும் அனைவரும் ஒரு டொலரையாவது அன்பளிப்பாக அளித்தால்தான் இனிவரும் ஆண்டுகளுக்கு அபிவிருத்திக்கான பாதையில் விக்கிப்பீடியாவை அழைத்துச் செல்ல இயலும்.லாபநோக்கமற்ற முறையில் இந்த விக்கிப்பீடியாவை நாங்கள் ஆரம்பித்த போது இதனால் ஏற்படப்போகும் பொருளிழப்பு பற்றியும் இதற்காக நீங்கள் வருத்தப்பட நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர்.

ஆனால், விக்கிப்பீடியா வர்த்தக ரீதியாக மாற்றப்பட்டு விட்டால் அதனால் இந்த உலகிற்கு பேரிழப்பு என்று நாங்கள் கருதினோம். ஞானத்தை விரும்பும் அனைவரையும் விக்கிப்பீடியா ஒன்றிணைத்து வருகிறது. படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் சில கொடையாளர்கள் ஆகியோர் நம்மை வாழ்வித்து வருகின்றனர்.நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை மாறாத எண்ணற்றத் தகவல்களை இங்கு பதிவிட்டு உங்களுக்காக உழைக்கும் மக்களை உள்ளடக்கிய சமுதாயமாக திகழும் விக்கிப்பீடியா இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கவும் வளரவும் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்’ என அந்த தகவலில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 14 அக்டோபர், 2019

ஈழத்தமிழன் கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப்பொறுப்பேற்பு

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.
  #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,
3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா 
கனடாவில் குடியேறினார்.
கடந்த 25 ஆண்டுகளாக கனேடிய பொலிஸ் சேவையில் குற்றப்பிரிவு, போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிஷான் துறையப்பா பணியாற்றி வந்தார்.
ஹால்டன் பிராந்தியத்தின் உதவி பொலிஸ் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் பீல் நகரத்தின் முதன்மை காவல்துறை அதிகாரியாக இப்போது பதவியேற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் எந்தளவுக்கு பொலிஸாரிடம் இருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனரோ, அதே அளவிற்கு பொலிஸாரும் அவர்களிடமிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனர் என நிஷான் துரையப்பா தெரிவித்தார்.
 3000 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட பீல் நகரத்தின் தலைமை அதிகாரியாக பதிவியேற்றுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக சிறப்பாக கடமையாற்றுவேன் என்று அவர் கூறினார்.பீல் நகரத்தில் உள்ள 1.4 மில்லியன் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள 3,000 அதிகாரிகளைக் கொண்ட பீல் நகர பொலிஸை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது எனது பாக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.
நிஷான் துரையப்பா ரொறண்டோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.
2012 இல் ராணி எலிசபெத் - ஐஐ வைர விழா பதக்கத்தையும் இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கனடாவில் சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
 யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது.
அத்துடன் இப் போட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இலங்கையில் இருந்து தெரிவாகிய ஒரே தமிழர் செ.செல்வதாசன் ஆவார்.  
இவரின் கண்டுபிடிப்பானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பார்வை அற்றவர்களுக்கான வழிகாட்டும் கருவி ஆகும். குறித்த கருவி இது சூரிய ஒளியில் இயங்க கூடியது 
என்பது மேலதிக தகவல்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில்லண்டனில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
  செல்போர்ண் வீதியில் அமைந்துள்ள குறித்த வணிக அங்காடியில் இன்று காலை 7.40 அளவில் ஏற்பட்ட தீ விரைவாக பரவியதால் 
பெரும் விபத்தாக மாறியது.
இதனை அடுத்து 25 தீயணைப்பு இயந்திரங்களுடன் அங்கு விரைந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப்படையினர் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இதுவரை அந்த இடத்துக்கு அருகில் செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. குறித்த அங்காடியில் 66 வணிக நிலையங்கள் அமைந்திருந்த நிலையில் அவற்றில் பல தீயினால் அழிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தினால் இன்று காலை அந்தப்பகுதியில் இருந்த தமிழ்மக்களும் பெரும் 
அச்சமடைந்துள்ள

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 17 ஜூலை, 2019

உலக சாதனை படைத்த பிரித்தானியாவில் யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
இம்முறை உலகக்கிண்ண போட்டியில் ஒரு வீராங்கனை மாத்திரம் அதிக கோல் பெற்ற வீராங்கனையாக தர்ஜினி பெயரிடப்பட்டுள்ளார்.
78 முறை மேற்கொண்ட முயற்சியில் 76 முறை கோல் பெற்றுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.அதற்கமைய தர்ஜினி 97 சதவீதம் கோல்களை வெற்றிகரமாக பெற்றுள்ளார்.
அத்துடன் இம்முறை போட்டிகளில் அதிக கோல் பெற்றவர்கள் பட்டியலிலும் தர்ஜினி முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார்.
3 போட்டிகளில் 183 கோல்கள் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் 125 கோல்கள் மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வியாழன், 4 ஜூலை, 2019

பிரான்ஸ் நாடு பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்துள்ளது

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.
பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.
பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்
 உறுதியளிக்கவேண்டும்.
பிராண்ஸில் தற்போது 85 விழுக்காட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளர்ப்பதாகக் கறப்படுகிறது.
தடை விதிப்பதன்மூலம் நிலைமையை மாற்றியமைப்பது 
அரசாங்கத்தின் நோக்கம்


செவ்வாய், 2 ஜூலை, 2019

சிட்னி புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் Bonnyrigg உள்ள அவசர பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு
 வரவழைக்கப்பட்டனர்.
32 வயதான நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் காயத்துடன் அவர் மீட்கப்பட்டிருந்தார்.
காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 60 வயதான நபர் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.