நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 21 மார்ச், 2020

சீனாவை அடுத்து மனிதர்களை கொத்துக் கொத்தாக இழக்கும் இத்தாலி.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சீனாவை அடுத்து தற்போது அதிக உயிர்பலி வாங்கியிருப்பது இத்தாலியில் தான்.நேற்றைய தினத்தில் தாய் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி
 அனைவரையும் நெகிழ வைத்தது
 நாங்கள் செய்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள் என்று கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருந்தார்.இந்நிலையில், கொரோனா 
வைரஸ் எப்படி எளிமையாக ஒருவரிடமிருந்து 
மற்றொருவருக்கு பரவுகிறது 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனாவுக்கான தடுப்பூசி அமெரிக்கப் பெண்ணிற்கு சோதனை முயற்சி

அமெரிக்காவில் தன்னார்வலப் பெண் ஒருவருக்கு முதன் முறையாக கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது. 
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளில் தடம் பதித்துள்ளது. தற்போது சீனாவில் 
கட்டுபாட்டில் உள்ள இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.
கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த
 மருந்து மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனவைத் தடுக்கும் 
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் கைசர் பெர்மனெட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனம் முதல்கட்டமாக பெண் தன்னார்வலருக்கு கையில் தடுப்பூசி ஒன்றை சோதனை முயற்சியாக போட்டுள்ளது.  இந்த சோதனையின் முடிவுக்காக 
ஆராய்ச்சியாளர்கள் காத்து உள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தற்காலிக உதவி திட்டத்தை அறிவித்தது

கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தாக்கம் காரணமாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்கு மற்றும் வேலை இல்லாதவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 573 டாலர் வரை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் யார் யாருக்கு பொருந்தும் என்று பார்ப் போமானால் கொரோனா வைரஸ் 
தாக்கம் உள்ளவர்கள், வைரஸின் அறிகுறி உள்ளவர்கள்,கொரோனா வைரஸ் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு இந்த திட்டம் மூலம் உதவித் தொகை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொழிலாளர்களுக்கான தற்காலிக உதவி திட்டம் (PATT or Programme d’aide temporaire aux travailleurs) என்று அழைக்கப்படும். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த 150 மில்லின் நிதி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 13 மார்ச், 2020

பிரித்தானியா கொரோனாவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அரசின் திட்டம்

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள 
நிலையில், பிரித்தானியா அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் பல பகுதிகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பாடசாலைகளை மூடுவது மற்றும் பெரிய அளவில் மக்கள் கூடுவதைத் தடை செய்வது, வீட்டில் இருந்தவாறு வேலை செய்யப் பணிப்பது போன்றவை இன்று அறிவிக்கலாம் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குளிருடன் இணைந்த
 அதிகரித்த வெப்பநிலை உடலில் இருந்தால் மக்களை வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கலாம் என ஸ்கொட்லாந்துக்கான அமைச்சர் அலிஸ்ரர் ஜாக் (Alister Jack) தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் இப்போது 460 பேருக்கு கொரோனா வைரஸ்
 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 இங்கிலாந்தில் 387, ஸ்கொட்லாந்தில் 36, வடக்கு அயர்லாந்தில் 18 மற்றும் வேல்ஸில் 19 என்ற எண்ணிக்கையில் நோயாளர்கள் உள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 460 பேர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 9 மார்ச், 2020

தமிழ் குடும்பத்திற்கு பிரித்தானியாவில் கொரோனாஅவர்களது வீட்டிற்கு சீல்

பிரித்தானியாவின் சவுத்ஹாலில் தமிழ் குடும்பமொன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ரக்ஸி ஓட்டுனர் ஒருவரின் குடும்பமே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளது. ரக்ஸி ஓட்டுனர் தொற்றி்கு இலக்காகி, குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த குடும்பத்தின் பிள்ளையொன்று 
பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடும்பத்தின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், தொற்றிற்கு இலக்காகியிருந்தது 
தெரிய வந்தது.
தற்போது அந்த வீடு சீல் வைக்கப்பட்டு, அந்த குடும்பம் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.லண்டன் நகரத்தில் மட்டும் நேற்று 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 4 மார்ச், 2020

தமிழரின் பிரபல நிறுவன வலையமைப்பை 76 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை

இலங்கைத் தமிழரிற்கு சொந்தமான லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக
 அறிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, 
இலங்கை ரூபாய் 76 பில்லியன் பெறுமதியில் கொள்வனவு செய்துள்ளது.2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தொலைத்தொடர்பு சேவையை லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) ஆரம்பித்தது.இதன்மூலம் 1.5 மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட பிரமாண்டமான MVNO சேவையைக் கொண்ட நிறுவனமாக லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) உருவெடுத்தது.
இதுவே ஸ்பெயினின் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் வலையமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.இந்தப் பரிவர்த்தனை 
குறித்து லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா 
சுபாஸ்கரன் தெரிவிக்கையில், “நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, நாட்டின் மிகப் பெரிய MVNO ஐ அதிஉயர் தரமான 
சேவையாகவும் குறைந்த 
கட்டணத்திலான தொலைத்தொடர்புச் சேவையாகவும் கட்டியெழுப்ப வேண்டும் என்றே கனவு கண்டோம். அந்தக் கனவு
 நனவாகி இப்போது அந்த பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறினார்.இதன் மூலம் ஸ்பெயினில் லைக்கா தொலைத்தொடர்புச் சேவையை 
மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் கொள்வனவு செய்வதென்பது, லைக்காவின் உலகளாவிய வெற்றியை 
உறுதிப்படுதிப்படுத்தி உள்ளது.அத்துடன் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைகா மொபைல் இலட்சினையை (Brand) நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக் கொள்ள இணங்கியிருப்பது, லைக்காவின் நிறுவனத்தின் பெருமிதமாகவும் கொள்ளப்படுகின்றது” என்றும் 
அவர் கூறினார்.
லைக்கா நிறுவனம் தொடர்ந்தும் உலக அளவில் 23 நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தைகளில் பிரமாண்ட செயற்பாட்டை தக்கவைத்துள்ளதுடன், புதிய நாடுகளில் தனது சேவையை விரிவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.ஸ்பெயின் நிறுவனத்தை விற்பனை செய்த அதேநேரம், உகண்டாவிலும் தனது 
புதிய வலையமைப்பை லைக்கா ஆரம்பித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும், பின்னரும் அவர்களிற்கு நிதியுதவியளித்த விமர்சனம் லைக்கா மீது வைக்கப்பட்டு வருவதும் 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 3 மார்ச், 2020

இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் குமுறல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் இலங்கையர் இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
 இலங்கை பெண், குறித்த காணொளியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி, காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை
 சென்று சிகிச்சைப்பெற முயற்சித்தேன்.இதன்போதுதான், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததை 
வைத்தியர்கள் அறிவித்தனர்.இத்தாலி நாட்டிற்கு வந்து சுமார் 10 வருடங்கள் கடந்துவிட்டன. நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக 
அறிவித்தார்கள்.அவர்களிடமிருந்து எனக்கும் தொற்றியதாக அறியக் கிடைத்தது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு
 உள்ளான அந்த பெண் பிரிதொரு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். என்னை பார்வையிடுவதற்கு 
எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவரை கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என இலங்கை அதிகாரியிடம் அப்பெண் 
குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஏனைய தரப்பினர் உங்கள் (இலங்கை பெண்) தொடர்பாக 
அக்கறையுடன் செயற்படுவதாகவும் இலங்கை 
மக்கள் அனைவரும் நீங்கள் நலம்பெற வேண்டுமென்பதில் அக்கறையுடன் அவதானித்துக்கொண்டு இருக்கின்றனர்.ஆகையினால், அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இலங்கையிலிருந்து உரையாற்றிய அதிகாரி 
இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>