நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 29 ஜனவரி, 2014

பிரான்சில் வெள்ளம்: மக்கள் வெளியேற்றம்

பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதுவரையிலும் 2 பேர் பலியாகி உள்ளனர், 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் அதிகாரி Laurent Cayrel, தனது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லும்...

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஜனாதிபதி மனைவியை விவகாரத்து செய்தார்..

. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒலாந்த் ஏற்கனவே திருமணமாகி மனைவி செகோலின் ராயலை விவாகரத்து பெற்றிருந்தார், அந்த திருமணம் மூலம் 4 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜனாதிபதி ஒலாந்த் வாழ்ந்து வரும் காதலியும் இரண்டாவது தடவை விவாகரத்து ஆனவர், இவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் ஜனாதிபதியுடன் சேர்ந்து வாழ்வதால் பிரான்சின் முதல் பெண் என்ற அந்தஸ்து பெற்றுள்ளார். இந்த...

வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஆட்டம் காண வைத்த நிலநடுக்கம் (காணோளி இணைப்பு)

  வரலாற்றில் இன்றைய தினம்- சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் பலியாயினர் 1857: தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைகழகமான கொல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது 1927: ஆல்பிரட் ஹிட்ச்கொக்(Alfred Hitchcock) தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்        1939: சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் பலியாயினர்         1972:...

புதன், 22 ஜனவரி, 2014

உலக பொருளாதார மாநாடு தொடங்கியது

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் 44வது மாநாடு தொடங்கியது.உலக பொருளாதார அமைப்பின் 44வது மாநாடு டாவோஸ் நகரில் நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அரசு தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வங்கி நிபுணர்கள், சமூகநல ஆர்வலர்கள் என 2,500 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டை, ஈரான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய...

ஹாங்காங்கில் ரூ.4 கோடிக்கு ஏலம் போன மதுபானம்

ஹாங்காங்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ஏலத்துக்கு வந்தது. இது 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது ‘தி மக்காலன்’ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் அந்த பாட்டில் சுமார் ரூ.4 கோடிக்கு (6,28,205 டாலர்) ஏலம் போனது. இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனிநபர் ஏலம் எடுத்தார். அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும்...

வியாழன், 9 ஜனவரி, 2014

விண்வெளி நிலையத்தின் ஆயுள் 4 வருடங்களால் நீடிப்பு...

பூமியை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டு முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பூமிக்கு மேலே 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும் 2020-ம் ஆண்டு வரை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ஆயுளை 4 வருடங்களுக்கு நீட்டித்து 2024 ஆண்டுகள் வரை நீடிக்க அமெரிக்காவின் ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது. இதைப்போன்று...