நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 2 பிப்ரவரி, 2019

திடீர் நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் குலுங்கிய பூமி

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த 
நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தின் மைய புள்ளி காபூல் நகரத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
212 கிலோ மீட்டர் ஆழத்துக்கு பூமியின் அடியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வெளியே ஓடினர். டெல்லியை தவிர வட இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக
 தெரிகிறது.
இருப்பினும்,நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ, உயிரிழப்புகள் குறித்து எவ்வித தகவல்களும்
 வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், இதனால் இலங்கை்கு பாதிப்புகள் எவையும் இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக