நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 6 பிப்ரவரி, 2019

பிரித்தானியாவில் தாயின் உயிரைக் காப்பாற்றிய பிறந்த குழந்தை

என் உயிரை என் மகள் தான் காப்பாற்றினாள் என்று பிரித்தானியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் உருக்கமாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Claire Granville. 40 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. அதன் பின் அதிலிருந்து மீண்டும் இருக்கும் இவர், எப்படி தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பது, இதிலிருந்து மீண்டது எப்படி என்பதைப் பற்றி பிரபல ஆங்கில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நான் செவிலியராக வேலை பார்க்கிறேன். 
கணவரின் பெயர் Mark Wright.
எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் முதல் குழந்தையின் பெயர் Jacob(12), இரண்டாவது குழந்தையின் பெயர் Amelie(10), இதில் மூன்றாவது குழந்தையின் பெயர் Matilda.
ஒவ்வொரு தாயும் குழந்தை பிறந்தவுடன் தன் குழந்தைக்கு எப்போது பால் கொடுப்போம் என்று தான் நினைப்பாள், அதே போன்று தான் எனக்கு மூன்றாவதாக Matilda பிறந்தவுடன் பால் கொடுக்க 
ஆரம்பித்தேன்.
தொடர்ந்து பால் குடித்த வந்த அவள், சில மாதங்களில் என்னுடைய இடது மார்பக்த்தில் பால் குடிக்க மறுத்தாள், முயற்சித்தும் அழுதாலே 
தவிர குடிக்க மறுத்தாள்.
இதனால் செவிலியரான நான் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதித்த போது, இடது பக்க மார்பில் கட்டி ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது புற்று நோயின் முதல் தாக்கம் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி 
தகவலை கூறினர்.
இதையடுத்து தொடர்ந்து மேற்கொண்ட சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் கட்டிகள் அகற்றப்பட்டு, புற்றுநோயிலிருந்து முழுவதும் குணமடைந்துள்ளேன்.
அவள் மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால், நான் அதை கண்டுகொண்டிருக்கமாட்டேன், புற்றுநோய் முற்றியிருக்கலாம், ஆனால் இப்போது நான் உயிரோடு இருப்பதற்கு Matilda தான் காரணம், அவள் பெரிதாக வளர்ந்தவுடன், நீ தான் என் உயிரை காப்பாற்றினாய் என்று சொல்ல வேண்டும் என உருக்கமாக கூறி முடித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக