பிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம்
குறிப்பிட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக