நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

ரீயூனியன் தீவு ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறிவருகின்றது

பிரான்ஸிற்கு சொந்தமான ரீயூனியன் தீவு தற்போது ஆட்கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தெரிய வருகின்றது.கடந்த சில வருடங்களாக சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியா
 நோக்கி செல்லும் நிலை காணப்பட்டது.தற்போது அவுஸ்திரேலியா கடுமையான சட்டங்களையும் பாதுகாப்பையும் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்கடத்தல்காரர்களின் பார்வை பிரான்ஸ் நோக்கி திரும்பியுள்ளது.
இலங்கையிலுள்ள பலர் பிரான்ஸ் செல்லும் நோக்கில் ரீயூனியன் தீவை நோக்கில் செல்ல முயற்சிப்பதாக, குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த வருடத்தில் மாத்திரம், சட்டவிரோதமாக 4 படகுகளில் இலங்கையர்களை ரீயூனியன் தீவிற்கு அழைத்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்களின் இரண்டு குழுக்களை பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.மேலும், நூற்றுக்கும் அதிகமான 
இலங்கையர்கள், அந்த நாட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி 
ஒருவர் தெரிவித்துள்ளார்.
படகு மூலம் பிரான்ஸ் செல்வதற்கு ஆயத்தமாக இருந்த குழுக்கள் இரண்டு கடந்த வாரம் சியம்பலாண்டுவ மற்றும் கிரின்ந்த 
பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.ஆட்கடத்தலில் ஈடுபடும் பிரதான நபர் தொடர்பான தகவல்களை குற்ற விசாரணை திணைக்களத்தினர் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளார்.
பிரதான சந்தேக நபர் ரீயூனியன் தீவில் இருந்து ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். ரீயூனியன் தீவிற்கு சென்றிருந்த நிலையில், அந்நாட்runiy1runiyanam11runiyanடு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 64 இலங்கையர்கள் கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.$$$$$$$
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக