நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான தேவாலயம் தீ விபத்து

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான  உள்ள நோட்ரே டேம் கேதட்ரல் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  15,04,2019, மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத்...

திங்கள், 15 ஏப்ரல், 2019

மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாலு நகரத்திலிருந்து வெகு தூரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்...

செல்பி விமான நிலையம் முன்பு '' எடுத்தால் மரண தண்டனை

தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம். இதன் காரணமாக கடற்கரைக்கு...

லூட்டன் வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது

பிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 ஆண்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நான்கு பேரும் பெட்போர்ட்செரீப் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த புதன்கிழமை லூட்டன் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளனர்...

வியாழன், 11 ஏப்ரல், 2019

இலங்கை கனடா இடையே முடிவான புதிய ஒப்பந்தம்

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும்  கனடியன் கொமர்ஷியல் கோப்ரேஷன் (Canadian Commercial Corporation) நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. மின்சக்தி பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக...

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வாழைப்பழப் பெட்டிகளுக்குள் ஜெர்மனியில் சிக்கிய மர்மம்

ஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 28 மில்லியன் டொலர். வாழைப் பழங்களிடையே பதுக்கப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, எங்கு செல்ல வேண்டியது என்பது இதுவரை...

இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! காயம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர்  காயமடைந்துள்ளார். இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில்...

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

யாழ் இளைஞன் லண்டனில் கார் விபத்தில் சிக்கி பலி

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் 04,04,2019, இடம்பெற்ற  கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஆருயிர் நண்பனை 6 ஆண்டுகளாக தன் தூக்கிச் செல்லும் சிறுவன்

சீனாவில் சிறுவன் ஒருவன் தமது மாற்றுத்திறனாளி நண்பனை கடந்த 6 ஆண்டுகளாக தோளில் சுமந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்வது அங்குள்ள ஊடகங்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மீஷன்  நகரத்தில் ஸூ பிங்யாங் என்ற 12 வயதுச் சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான்.அதே பகுதியில் ஸாங் ஸீ என்னும்  மாற்றுத் திறனாளி சிறுவனும் வசித்து வருகிறான். இருவரும் சிறிய வயது முதலே நண்பர்கள். மட்டுமின்றி மாற்றுத் திறனாளி...

வியாழன், 4 ஏப்ரல், 2019

பங்குபெறும் இலங்கை பெண் உலக பெண்கள் வழிகாட்டல் பங்கான்மையில்

ஐக்கிய அமெரிக்காவில் நடைப்பெற்ற போர்ச்சூன்-அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உலக பெண்களின் வழிகாட்டல் பங்கான்மையில் ஹேலிஸ் பில்சி நிறுவனத்தின் மூலோபாய வர்த்தக அபிவிருத்தியின் தலைவர் மனோஹரி அபயசேகர பங்கேற்றுள்ளார்.(sri Lankan female business leader participates fortune mentorship pogram) குறிப்பாக 15 நாடுகளிலிருந்து கலந்துகோண்ட பெண் தலைவர்களில் மனோஹரி அபயசேகரவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை  விசேட அம்சமாகும் மனோஹரி அபயசேகரவும் ஏனைய 18 பேரும் ஃபோர்ச்சூன்...

புதன், 3 ஏப்ரல், 2019

உலகளவில் 200 கோடி அடிப்படை குடிநீர் வசதி இல்லா மக்கள்

தேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக,  உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள  யுனிசெப் அமைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், குடிநீர் பற்றாக்குறையால் சர்வதேச அளவில்  மருத்துவமனைக்கு செல்லும் 15 சதவீதம் பேருக்கு  தொற்றுநோய் ஏற்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் பிறக்கும் 10 லட்சம் குழந்தைகள்...

திங்கள், 1 ஏப்ரல், 2019

சர்வ தேசத்தில் முட்டாள்கள் தினம் எவ்வாறு உருவானது

ஏப்ரல் 1 .இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின்பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக்கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான்...