நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 29 மார்ச், 2020

ஒரே நாளில் கொரோனாவினால் இத்தாலியில் மடிந்த 919 பேர் பெரும் சோகம்

கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தாக்கத்தினால் 28.03.20.ஒரே நாளில் இத்தாலியில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவினால் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது  பதிவாகியுள்ளது. கொரோனா தாக்கம் தலைவிரித்தாடும் இன்னொரு நாடான ஸ்பெயினில் நேற்றும் 700 இற்கும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகின. உலகளவில் இதுவரை கொரொனா  பாதிப்பினால் 27,250 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 594,377 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் உளவளவில்...

சர்வதேச கொரோனா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள  தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 மணி வரை உலகம் முழுவதும் 6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது.அவர்களில் 27,889 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,32,688 பேர்  குணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் கொரோனா வைரஸால்...

சனி, 28 மார்ச், 2020

பிரபல மருத்துவ நிபுணர் லண்டனில் கொரோனாவால் மரணம்.

கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ளவர் என புகழப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று பிரித்தானியா உறுப்பு மாற்று சிகிச்சை சங்கம் தெரிவித்துள்ளது. 63 வயதான டாக்டர் ஆதில் எல் தயார் சவுதி  அரேபியா, சூடான் மற்றும் தெற்கு  லண்டன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்.டாக்டர் எல் தயார் மார்ச் மாதத்தில் கொரோனா அறிகுறிகளை காட்டிய பின்னர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்,...

வியாழன், 26 மார்ச், 2020

இங்கிலாந்தில் கொரோனாவினால் பரிதாபமாகப் பலியான 21 வயது இளம் யுவதி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 21 வயது பெண் ஒருவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரின் ஹை வைகோம்பைச் சேர்ந்த சோலி மிடில்டன் (21) என்ற யுவதி கடந்த வாரம் இறந்தார்.அவரது அத்தை எமிலி மிஸ்திரி வெளியிட்ட பேஸ்புக் பதிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உங்களால் இயன்றதை செய்யும்படி மற்றவர்களையும் கேட்டுக் கொள்ளும்படி அவர் மக்களிடம்  கோரிக்கை விடுத்தார். கொரொனா வைரஸ் முதியவர்களையே...

உலகமே வியக்கும் வன்னம் கள முன்னணியில் நிற்க்கும் தமிழ் மருத்துவர்கள்-

பிரித்தானியா மட்டும் அல்ல, பல உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காணப்படும் இன் நிலையில், பல ஆயிரம் தமிழ் மருத்துவர்கள் களத்தில் நின்று சேவை புரிந்து வருகிறார்கள். அதிலும் பொதுவாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பல தமிழ் மருத்துவர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி, பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு சேவை புரிந்து வருவது பாராட்ட தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவை பொறுத்தவரை தமிழர்கள் சுமார் 4 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இது அன் நாட்டு சனத்தொகையில் 1%...

பாரிய நிலநடுக்கம் குரில் தீவுகளில் சனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வாபஸ்

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரில் தீவுகளில் இன்று காலை 7.5 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.ரஷ்யாவுக்கு  சொந்தமான இந்த குரில் தீவுகளில் கடலின் அடியில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.இதனை அடுத்து, உடனடியாக  குரில் தீவுகள் மற்றும் பசுபிக் பெருங்கடலில்  அமைந்துள்ள ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும்...

செவ்வாய், 24 மார்ச், 2020

நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன்

நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்? மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும்...

சனி, 21 மார்ச், 2020

சீனாவை அடுத்து மனிதர்களை கொத்துக் கொத்தாக இழக்கும் இத்தாலி.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சீனாவை அடுத்து தற்போது அதிக உயிர்பலி வாங்கியிருப்பது இத்தாலியில் தான்.நேற்றைய தினத்தில் தாய் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி  அனைவரையும் நெகிழ வைத்தது  நாங்கள் செய்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள் என்று கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருந்தார்.இந்நிலையில், கொரோனா  வைரஸ் எப்படி எளிமையாக ஒருவரிடமிருந்து  மற்றொருவருக்கு பரவுகிறது  இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>...

வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனாவுக்கான தடுப்பூசி அமெரிக்கப் பெண்ணிற்கு சோதனை முயற்சி

அமெரிக்காவில் தன்னார்வலப் பெண் ஒருவருக்கு முதன் முறையாக கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது.  சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளில் தடம் பதித்துள்ளது. தற்போது சீனாவில்  கட்டுபாட்டில் உள்ள இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது. கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த  மருந்து மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனவைத் தடுக்கும்  ஆராய்ச்சியில்...

கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தற்காலிக உதவி திட்டத்தை அறிவித்தது

கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தாக்கம் காரணமாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்கு மற்றும் வேலை இல்லாதவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 573 டாலர் வரை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் யார் யாருக்கு பொருந்தும் என்று பார்ப் போமானால் கொரோனா வைரஸ்  தாக்கம் உள்ளவர்கள், வைரஸின் அறிகுறி உள்ளவர்கள்,கொரோனா வைரஸ் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், வெளிநாட்டிலிருந்து...

வெள்ளி, 13 மார்ச், 2020

பிரித்தானியா கொரோனாவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அரசின் திட்டம்

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள  நிலையில், பிரித்தானியா அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் பல பகுதிகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாடசாலைகளை...

திங்கள், 9 மார்ச், 2020

தமிழ் குடும்பத்திற்கு பிரித்தானியாவில் கொரோனாஅவர்களது வீட்டிற்கு சீல்

பிரித்தானியாவின் சவுத்ஹாலில் தமிழ் குடும்பமொன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ரக்ஸி ஓட்டுனர் ஒருவரின் குடும்பமே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளது. ரக்ஸி ஓட்டுனர் தொற்றி்கு இலக்காகி, குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த குடும்பத்தின் பிள்ளையொன்று  பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடும்பத்தின்...

புதன், 4 மார்ச், 2020

தமிழரின் பிரபல நிறுவன வலையமைப்பை 76 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை

இலங்கைத் தமிழரிற்கு சொந்தமான லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக  அறிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை,  இலங்கை ரூபாய் 76 பில்லியன் பெறுமதியில் கொள்வனவு செய்துள்ளது.2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தொலைத்தொடர்பு சேவையை லைக்கா தொலைத்தொடர்பு...

செவ்வாய், 3 மார்ச், 2020

இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் குமுறல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் இலங்கையர் இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இலங்கை பெண், குறித்த காணொளியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி, காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை  சென்று...