நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து???

கிழக்கு சீனாவின் ஷான்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து அங்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹீவண்டாய் கவுண்டியில் உள்ள ரங்சிங் என்ற நிறுனத்திற்குச் சொந்தமானான ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
ரசாயன பொருட்கள் இருந்த கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டதால் பலத்த சத்ததுடன் ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதாக 
கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் ரசாயனமானது நெருப்பு பட்டால் வேதியல் மாற்றம் ஏற்பட்டு நச்சு வாயுவை உருவாக்கும் என அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தங்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துள்ளனர்.
முதற்கட்ட தகவலின் படி, உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை மீட்டு போதிய முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 12-ம் தேதி, இதேபோன்று நடந்த ரசாயன விபத்தில் 121 பேர் உயிரிழந்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஒரே கிராமத்தை சேர்ந்த 2000 மக்கள் இரவில் திடீர் மாயம்:

கனடாவில் அமைந்துள்ள Angikuni Lake என்ற ஏரியின் அருகே, Angikuni என்றழைக்கப்பட்ட கிராமத்தில் வாழ்ந்த 2000 குடியிருப்புவாசிகள் மாயமான சம்பவம் மர்மமாகவே நீடிக்கிறது.
Angikuni கிராமத்தில் சுமார் 2000 எஸ்கிமோக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் விலங்கின் தோல்களை விற்று அதன் மூலம் தங்கள் வாழ்வை நடத்தி வந்துள்ளனர்.
எனவே அவர்கள் விலங்கை வேட்டையாடுவதற்காக வேட்டை நாய்களையும் வளர்த்து வந்துள்ளனர்.
அந்த கிராமத்தினரிடம் இருந்து விலங்கின் தோல்களை வாங்கி செல்ல எண்ணற்ற வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், அந்த கிராமத்தில் கடந்த 1930ம் ஆண்டு, நவம்பர் மாத பனி காலத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அன்று கனடாவை சேர்ந்த ஜோ லேபலே என்னும் விலங்கு தோல் சேகரிக்கும் நபர், அந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அவர் அந்த கிராமத்தை அடைந்த போது அங்கு ஒரு அமானுஷ்ய அமைதி மட்டுமே நிலவியுள்ளது.
ஜோ லேபலே கண்ணில் ஒரு கிராம வாசி கூட காணப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த அவர்களது கூடாரங்களை தேடி சென்றுள்ளார்.
தெருக்கள் மட்டுமல்லாமல் அனைத்து கூடாரங்களும் ஆட்கள் இல்லாமல் காலியாகவே இருந்துள்ளது.
மேலும் அவர்கள் வளர்த்த வேட்டை நாய்கள் ஒன்று கூட அந்த கிராமத்தில் இல்லை.
வறுமை மற்றும் பஞ்சம் காரணமாக அவர்கள் அந்த கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்திருக்கலாம் என்று நினைத்த அவர், அவர்களுடைய தானிய கிடங்கினை சோதனையிட்டுள்ளார்.
ஆனால் அங்கிருந்த அனைத்து கூடாரங்களிலும் போதுமான அளவில் உணவும், மீன்களும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்துள்ளன.
இதனால் மேலும் குழப்பமும் அதிர்ச்சியும்டைந்த ஜோ, கிராமத்தினரின் காலடி தடங்கள் எதுவும் உள்ளதா அதன் மூலம் அவர்கள் எந்த திசையில் சென்றார்கள் என்று அறிய அந்த பனி பிரதேசத்தில் தேடியுள்ளார்.
ஆனால் எங்குமே அந்த கிராமத்தினரின் கால் தடங்கள் கூட இல்லாதது மேலும் அவரது அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பயத்தில் தந்தி அலுவலகம் நோக்கி ஓட்டமெடுத்த அந்த நபர், கனடிய பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை பற்றி தந்தி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர். எவ்வித தடையமும் கிடைக்காததை அடுத்து பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டு சோதனை நடந்துள்ளது.
அப்போது அந்த பனி பிரதேசத்தின் குறிப்பிட்ட இடத்தில், 12 அடி ஆழத்தில் வேட்டை நாய்கள் அனைத்தும் பட்டினியால் இறந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் அங்கிருந்த கல்லறைகளை தோண்ட முயற்சித்த போது, பனிக்கட்டிகள் பாறையை விட கடுமையாக இருந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த கல்லறைகள் அனைத்தும் காலியாக இருந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு புதைக்கப்பட்டிருந்த உடல்கள் யாரால், எதற்காக அகற்றப்பட்ட்து என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே இந்த வினோத சம்பவத்தில் வேற்றுக் கிரகவாசிகளின் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்ற தொடங்கியது.
பல நாட்களாக தேடியும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், அந்த கிராம வாசிகள் சமைத்த உணவை வைத்து அவர்கள் 2 வாரங்களுக்கு முன்பாகவே சென்றிருக்கலாம் என்று பொலிஸ் கூறினர்.
அப்படியெனில் பனியால் சூழ்ந்த அந்த கிராமத்தில் ஜோ நுழைந்த போது, எரிந்த தீப் பந்தங்கள் யாரால் கொளுத்தப்பட்டது என்பது போன்ற எண்ணற்ற விடை தெரியா கேள்விகள் மிச்சம் இருந்தன.
இந்த சம்பவம் உண்மை சம்பவம் அல்ல என்றும், புனைவு கதை தான் என்றும் கூறப்படுவதால் எது உண்மை என்ற முடிவுக்கு வருவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பாலியல் சித்ரவதை செய்து குதிரையை குத்தி கொன்ற மர்ம நபர்:???

பிரித்தானிய நாட்டில் பெண் குதிரை ஒன்றை பாலியல் சித்ரவதை செய்து கொடூரமாக குத்தி கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்கொட்லாந்தில் உள்ள அபெர்டீன்ஷைர் நகரை சேர்ந்த சோ ரைட் என்ற பெண்மணி வசித்து வருகிறார்.

குதிரைகள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், பிளேஸ் எனப் பெயரிடப்பட்ட ஒரு பெண் குதிரையை கடந்த 18 ஆண்டுகளாக செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் திகதி இரவு வேளையில், அவரது பண்ணைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் வந்துள்ளான். பின்னர், அங்கு கட்டப்பட்டு இருந்த குதிரைக்கு பாலியல் ரீதியில் சித்ரவதை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, அந்த மர்ம நபர் குதிரையின் மார்பில் சரமாரியாக கத்தியால் குத்தியதில் குதிரை மயங்கியுள்ளது.

மறுநாள் காலையில், தனது குதிரை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த சோ ரைட் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர், தன்னுடைய குதிரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால், குதிரை உரிமையாளர்கள் தங்களது குதிரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த பெண் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.

குதிரையை கொன்ற நபரை கண்டுபிடிக்கும் முயற்சிக்காக அவருக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் 1000 பவுண்ட் நிதியை வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய New Pitsligo நகர பொலிசார், பெண் அளித்துள்ள புகாரை தொடர்ந்து குற்றவாளியை தேடி வருவதாகவும், குதிரையை கொடூரமாக கொன்று மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த மர்ம நபர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பயங்கர குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்து கோயிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதனை பாங்காக் போலீஸாரும், மீட்புப் படையினரும் தெரிவிக்க, அரசு தரப்பும் உறுதி செய்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை 27 என்று வேறு சில அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன, காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று மாலை 6.30 மணியளவில் சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் பெருமளவில் கோயிலுக்கு வந்திருந்த நேரத்தில் மோட்டார்சைக்கிள் வாகனத்திலிருந்து குண்டு வெடித்தது.
முதல் குண்டு கோயில் வளாகத்தினுள் இருந்தது. இரண்டாவது குண்டு வளாகத்துக்கு எதிர்ப்புறம் இருந்தது.
“இப்போதைக்கு கூற முடிவதெல்லாம் மோட்டார்சைக்கிள் குண்டு வெடித்தது இதில் பலர் பலியாகியுள்ளனர், விவரங்களை இப்போதைக்கு என்னால் தெரிவிக்கவியலாது” என்று தாய்லாந்து உயர் போலீஸ் அதிகாரி அங்சானனந்த் என்பவர் தெரிவித்தார்.
இதில் 12 பேர் பலியாகியுள்ளனர், 78  பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்புப் பகுதியில் இருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், மனித உடல் பாகங்களும் ரத்தம் தோய்ந்த சதைகளும் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்ததாக தெரிவித்துள்ளது. 2-வது குண்டு வெடிக்கலாம் என்ற சந்தேகம் எழ அங்கு பரப்பரப்பு கூடியது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்த இந்த நாசவேலை செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிண்ட்லோம் மாவட்டத்தில் புகழ்பெற்ற எரவான் என்ற இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப்பயணிகள், குறிப்பாக கிழக்காசிய பயணிகள் வருவது வழக்கம், உள்ளூர் தாய்லாந்து வாசிகளுக்கும் பிடித்தமான ஒரு தலம் இது. இது இந்துக் கடவுள் பிரம்மாவுக்கான கோயில் என்றாலும் தினசரி ஆயிரக்கணக்கான பவுத்தர்களும் இங்கு வழிபாடு செய்ய வருகின்றனர்.
பாங்காக்கின் வணிகவீதியில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களுக்கு இடையே பிரம்மா கோயிலுக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மத்திய தரைக்கடல் பகுதியில் கரை ஒதுங்கிய உடல்கள்???

ஐரோப்பா நோக்கி பயணப்பட்ட அகதிகள் குழு ஒன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் சிலரது உடல்கள் லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது பதைபதைக்க வைத்துள்ளது. லிபியாவின் ஜுவாரா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக மட்டுமின்றி அகதிகள் படும் அவஸ்தைகளை 
வெளிச்சமிட்டு காட்டுவதாக உள்ளது. கரை ஒதுங்கிய சில உடல்களில் கடல் அரித்தது போக வெறும் எலும்புகளே காணப்படுகிறது, இருந்தும் அணிந்திருந்த உடைகள் அப்படியே உள்ளன.
மக்கள் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும்போது மட்டுமே புலம் பெயர ஆயத்தமாகிறார்கள், இது பாரிய கொடுமை என லிபியாவின் சுகாதாரத்துறை தலைவர்
 தெரிவித்துள்ளார். கடந்த சனியன்று லிபியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் அதிக பயணிகளுடன் பயணித்த படகிலிருந்த 40க்கும் மேற்பட்ட அகதிகள் மூச்சுத்திணறலால் மடிந்துள்ளனர்-
அந்த படகானது 400க்கும் அதிகமானவர்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இத்தாலிய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த படகை நெருங்கும்போது அது கடலில் மூழ்கத்துவங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் பப்புவா அருகே மாயமானது

இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது.
பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக ரொய்ட்டரில் செய்தி வெளியாகி உள்ளது.
விமானத்தின் சமிக்ஞைகளுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
ட்ரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்த போதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் எயார் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்தனர்.
இதையடுத்து, விமான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விமானம் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்! அதிக தமிழர்கள் போட்டியிடும் தேர்தல் களம்

கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்தத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன.
கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர்.
இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>