நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 28 மார்ச், 2015

விமானத்தின் துணை விமானியின் வீட்டில்சோதனை???

 
பிரான்சில் விபத்துக்குள்ளான ‘ஜேர்மன்விங்ஸ் விமானத்தை அதன் சக விமானி வேண்டுமென்றே அழித்துள்ளதாக தகவல் வெளியாகி பரப ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவ் விமானி தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விமானியின் பெயர் என் ட்ரியஸ் லுபிட்ஸ் எனவும் அவர் தனிப்பட்ட பிரச்சினைகளால் உள ரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
28 வயதான அவர் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லுபிட்ஸின் வீட்டை சோதனையிட்டுள்ள அதிகாரிகள் அவர் தொடர்பில் பல முக்கிய விடயங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவரது கணனி உட்பட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
லுபிட்ஸின் வீட்டில் முக்கிய ஆதாரமொன்றை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை ஆராய்ந்து வருவதாகவும் ஆனால் இப்போதைக்கு அது என்ன என்பது தொடர்பில் தற்போது வெளிப்படுத்தப் போவதில்லையெனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் விமானத்தை செலுத்துவதற்கான தகுதியைக் கொண்டிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானியின் தாய் ஒரு பியானோ ஆசிரியை எனவும் , தந்தை ஒரு வர்த்தகர் எனவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை லுபிட்ஸின் நண்பர்கள் , அயலவர்கள் அவரை நல்லதொரு இளைஞரெனவும் வழமைக்கு முரணான நட த்தை எதனையும் கொண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய பதிவுகள்:
விமானத்தை அழித்த விமானியும் , அவரது பின்னணியும்
தலிபான் தலைவன் முல்லா பசுல்லா பலி?
ஆபாசப் படம் பார்த்த 3 மூத்த நீதிபதிகளின் பதவி பறிபோனது
எகிப்து கிஸா பிரமிடுகளில் ஆபாச படம் எடுத்த விவகாரம் விசாரணைக்கு!!!
இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்; எச்சரிக்கிறார் ஐ.நா ஆணையாளர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஞாயிறு, 30 நவம்பர், 2014

ராட்சத' ராக்கெட்: ஜிஎஸ்எல்வி ‘மார்க் 3 டிசம்பரில் விண்ணில் ஏவி சோதனை

 ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதள இயக்குநர் பேட்டி
ஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிஎஸ் எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட் டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சி ரூ.13 ஆயிரம் கோடியில் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இது டிசம்பரில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஏவுதள இயக்குநர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் கூறியதாவது:

3-ம் தலைமுறை ராக்கெட்

விண்வெளிக்கு ராக்கெட்டில் மனிதனை அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தை நம்நாட்டி லேயே உருவாக்கும் விதமாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 என்ற 3-ம் தலைமுறை ராக்கெட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது ஜிஎஸ்எல்வி மார்க் 3 பரிசோதனை ராக்கெட்டை தயாரித்து வருகிறோம். இந்த பரிசோதனை திட்டத்துக்கு ரூ.140 கோடி செலவிடப்பட்டுள்ளது. 600 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ராக்கெட் கருவிகளுக்கான செலவு மட்டும் ரூ.15 கோடி. இதை டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்க திட்டமிட்டுள்ளோம்.

630 டன் ராட்சத ராக்கெட்

ராக்கெட் 630 டன் எடை கொண்டது. இஸ்ரோ வரலாற்றி லேயே அதிக எடையில் ஏவப்படும் ராக்கெட் இது. வீரர்கள் பயணிப்பதற்கான பரிசோதனை நிலையிலான கலம் (க்ரூ), தனது முழு இலக்கு வரை செல்லாது. புறப்பட்ட 11.40 நிமிடத்தில் அந்தமான் அருகில் விழும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் முழு வெற்றி கிடைக்காவிட்டாலும், இலக்கை நோக்கி பயணிப்பது, கீழே விழும் கலத்தை பத்திரமாக மீட்பது ஆகியவற்றில் நமது தொழில்நுட்பத்தின் வலு தெரியவரும்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதனை அனுப்ப மத்திய அரசு தற்போதுவரை அனுமதி அளிக்கவில்லை. மனிதனை அனுப்ப எங்களை முழுமையாக தயார்படுத்திக்கொண்ட பிறகு, அனுமதிக்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு இயக்குநர் பிரசாத் கூறினார்.

கடலில் விழுகிறது கலம்

ஜிஎஸ்எல்வி மார்க் 3 பரிசோதனை ராக்கெட்டில் 3 அடுக்குகளில் எரிபொருள் நிரப்பப் படும். முதல் நிலையில் எஸ்.200 என்ற இரு உருளைகளில் திட எரிபொருள் நிரப்பப்படும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் 130 விநாடி வரை எரிந்து, ராக்கெட்டில் இருந்து கழன்று கடலில் விழுந்துவிடும். அதற்குள் ராக்கெட் 70 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்கும்.

113-வது நொடியிலேயே 2-வது அடுக்கில் உள்ள திரவ எரிபொருள் நிரப்பப்பட்ட எல்-110 என்ற உருளை எரியத் தொடங்கும். இது 200-வது விநாடி வரை எரியும். அப்போது ராக்கெட் 126 கி.மீ. சென்றிருக்கும். 3-வது அடுக்கில் நீர்ம நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டிருக்கும். இது எரியாமல் 126-வது கி.மீ. தொலைவில் ராக்கெட்டில் இருந்து கழன்றுவிடும். அதன் பின்னர் ராக்கெட்டில் உள்ள க்ரூ கலம் கீழே விழும். அது 1600 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையை அடையக்கூடும். இதை தடுக்க அலுமினிய பூச்சு கொண்ட சிலிகான் தகடால் மூடியிருக்கிறோம்.

புவி ஈர்ப்பு விசையால் க்ரூ கலம் வேகமாக கீழே விழுவதை தடுக்க 3 அடுக்கில் பாராசூட் பொருத்தப்பட்டிருக்கும். பாராசூட் ஒன்றன் பின் ஒன்றாக விரிந்து, கலம் மெதுவாக அந்தமான் அருகே 160 கி.மீ. தூரத்தில் கடலில் விழும். கடலோர காவல் படை, விமானப் படை உதவியுடன் அது மீட்கப்படும் என்று ராக்கெட் ஏவுதளத்தின் தொழில்நுட்ப அலு வலர்ர்கள் கூறின.

ஞாயிறு, 23 மார்ச், 2014

வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி


அமெரிக்காவின் கொலம்பியா புறநகர் பகுதியான பால்டிமோரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று ஒரு மர்ம ஆசாமி புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து எதிர் தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். இதில் ஒருவன் அருகில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து கிடந்தது. எனவே, அவன் தாக்குதல் நடத்திய ஆசாமியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது வணிக வளாகம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடந்தபோது உயிருக்குப் பயந்து கடைகளிலும், உணவகங்களிலும் பதுங்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 

சனி, 1 மார்ச், 2014

பல்பாருள் அங்காடியில் பந்தாடிய கத்தி


கனடாவின் எட்மன்டன் வடமேற்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதல் வெஸ்ரேன் குறொசர்ஸ் உள்ள பல்பொருள் அங்காடியில் நடைபெற்றுள்ளது. அங்கு 200 பேர்கள் வரையில் வேலை செய்கின்றனர்.

இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதில் 29 வயதுடைய ஜேமி பசீக்கா என்ற பல்பொருள் அங்காடி ஊழியரே இக்கொலைக்கான சந்தேக நபர் என பொலிசாரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது இந்த நபர் இரண்டு கத்திகள் வைத்திருந்ததோடு உடல் கவசமும் அணிந்திருந்ததாக அப்பகுதி இன்ஸ்பெக்டர் அலன் தெரிவித்துள்ளார்.
தற்போது கைதுசெய்யப்பட்ட நபர் 2009ம் ஆண்டில் கொலை குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்ததாக கூறப்படுகின்றது.
 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இராணுவப்படை வீரர்களின் தலையை துண்டித்த தலிபான்கள்

பாகிஸ்தானில் எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து தலிபான்கள் கொலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான்களின் ஒரு பிரிவினரான முகமது ஏஜென்சி நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த 2010ம் ஆண்டில் கடத்திய எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்யப்படாத பட்சத்தில்,

23 பேரை கொலை செய்ததற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக முகமது ஏஜென்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசுடன், தலிபான்களின் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்த வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

திங்கள், 10 பிப்ரவரி, 2014

அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரானிய யுத்த கப்பல்கள்

ஈரானின் பல யுத்தக்கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பு எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஈரானிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஈரானிய கடற்படை அதிகாரியான அட்மிரல் அப்ஷின் ரெஸாயீ ஹதாத்தை மேற்கோள் காட்டி ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு அருகிலிருந்து அத்திலந்திக் சமுத்திரத்தை நோக்கிய ஈரானிய யுத்த கப்பல்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அட்மிரல் ஹதாத் தெரிவித்துள்ளார். இந்நகர்வானது ஒரு சமிக்ஞையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வொஷிங்டனிலுள்ள தம்மை இனங்காட்ட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கடல் எல்லையை நெருங்குவதாக கூறப்படுவது குறித்து சந்தேகம் தெரிவித்தார். ஆனால், சர்வதேச கடற்பரப்பில் இயங்குவதற்கு கப்பல்களுக்கு சுதந்திரம் உள்ளதாக அவர் தெரிவித்தாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இலங்கையர் உட்பட 2000 பேர் சவூதியில் கைது


 சவூதி அரேபியா வழங்கிய பொதுமன்னிப்பு காலத்தில் அங்கிருந்து வெளியேறாது தொடர்ந்தும் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் உட்பட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த வாரம் சவூதி அரேபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, ஏமன், எகிப்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக சவூதியில் தொழில் புரிந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சவூதி அரேபிய அரசு வழங்கிய பொது மன்னிப்பு காலத்தில் அங்கு சட்டவிரோதமாக தங்கிருந்த சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பினர்

பொது மன்னிப்பு காலத்திற்கு பின்னரும் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை சவூதி அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.