நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 29 பிப்ரவரி, 2016

நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் !!!

  நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது. போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த 'தாரா ஏர்' நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இரண்டு வெளிநாட்டினர் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பயணிகளும், விமானி உள்பட...

இலங்கையருக்கு பிரித்தானியாவில் இலவச சமூக பணிக்கான உத்தரவு`?

பிரித்தானியாவில், மனைவி மீது தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவருக்கு 12 மாத கால சமூக பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வாடகை வாகனம் செலுத்தி வந்த குறித்த நபர், தமது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவரை தாக்கியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 40 நாட்கள் புனர்வாழ்வளிப்பும், 100 மணித்தியால வேதனமற்ற தொழில் புரிதலுக்குமான உத்தரவும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும்...

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

குறைந்த-வருமானம் உடைய மாணவர்களிற்கு வெற்றி?

கனடா- கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் உயர்கல்வி பயிலும் நிலைமை மிகவும் இலகுவானதாக மாறியுள்ளது. வருடமொன்றிற்கு 50,000 டொலர்களிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளிற்கு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி கட்டணம் இலவசமாக்கப்படும் என லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மட்டுமன்றி  நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களிற்கு மேலதிக மானியத் தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. டொலர்கள் 83,000ற்கும் குறைந்த...

புதன், 24 பிப்ரவரி, 2016

கடுமையாக பாதிக்கும் :பிரிட்டன் தொழிலதிபர்கள் எச்சரிக்கை

   டேவிட் கேமரூன் தான் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்புக்கான நாளாக ஜூன் 23ம் தேதியை  அவர் நிர்ணயித்தார். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பரிஸ்லாச்சப்பலில் படுகொலை!கொலையாளி, தப்பியோட்டம் !!

லாச்சப்பல் பகுதிக்கு மிகவும் அண்மையில் உள்ள ஸ்டாலின்கிராட் (Stalingrad) மெட்ரோ அருகில் ஒரு படுகொலை நடந்துள்ளது. பரிஸ் பத்தில், நடக்கும் அதிக வன்முறைகளால், முதன்மைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடணப்படுத்தப்பட்ட பகுதியான, (ZSP – zone de sécurité prioritaire) avenue de Flandre இல் ஸ்டாலின்கிராட் மெட்ரோ அருகில், இந்தப் படுகொலை நடந்துள்ளது. கொலைத் தாக்குதலின் பின்னர் தப்பியோடிய கொலையாளி, இன்னமும் கைது செய்யப்படவில்லை. இங்கிருக்கும் ஒரு மளிகைக் கடையின்...

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கற்பை இணையதளம் மூலம் சந்தித்து பறிகொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

பிரித்தானிய நாட்டில் இணையத்தளம் மூலமாக அறிமுகமில்லாத ஆண்களிடம் சிக்கி கற்பை பறிகொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 6 மடங்காக அதிகரித்துள்ளது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய நாட்டின் தேசிய குற்றவியல் ஏஜென்சி அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’டேட்டிங் அப்ளிகேஷன்’ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமில்லாத நபர்களை சந்தித்து கற்பழிப்பிற்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்துள்ளதாக...

மூதாட்டிகள்: 2,00,000 யூரோவை மூட்டைக்கட்டி வைத்திருந்த னர் அதிர்ச்சியில் பொலிசார்?

இத்தாலி நாட்டில் வறுமையில் வாடிய இரண்டு வயதான சகோதரிகள் தங்களுடைய பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக 2,00,000 யூரோ பணம் வைத்திருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோம் நகருக்கு அருகில் உள்ள San Giovanni என்ற பகுதியில் 93 மற்றும் 80 வயதான சகோதரிகள் இருவர் ஒரு பாழடைந்த வீட்டில் வசித்து  வந்துள்ளனர். இருவரும் கடுமையான வறுமையில் வாடியதால், அருகில் குடியிருந்தவர்களிடம் சில உதவிகளை அடிக்கடி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், சில...

சனி, 6 பிப்ரவரி, 2016

குழந்தை உள்பட நிலநடுக்கத்தால் 5 பேர் பலி 318 பேர் காயம்!!!

தாய்வான் நாட்டின் தென்பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்பட ஐவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. தாய்வானின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங்  நகரில் இருந்து  சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின்...