நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 5 ஆகஸ்ட், 2015

நடுத்தர வயதில் தந்தையானால் இளம் வயதில் மரணம் !!!

சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக 
தெரியவந்துள்ளது. 25 
வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடுமபத்
 தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தான் நடுத்தர 
வயதில் மரணம் அடைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
22 வயதில் தந்தை ஆகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 26 சதவீதம் உள்ளது என அந்த ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உங்கள் நாட்டை முதலில் திருத்துங்கள்”:ஒபாமாவிற்கு பதிலடி???

ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்று உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு கென்யா மற்றும் எத்தியோபிய இளைஞர்கள் சூடான கேள்விகள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதிபர் ஒபாமாவின் தந்தை பிறந்த நாடான கென்யாவிற்கு ஒபாமா சில தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
ஒபாமாவின் உரையில், ஆப்பிரிக்க மக்கள் மீது தனக்குள்ள அன்பு மற்றும் மனித உரிமைகளை பற்றி ஒபாமா உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
கென்யாவில் உள்ள நைய்ரோபியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒபாமாவின் உரை அந்நாட்டு மக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒபாமாவின் உரை குறித்து பேசிய Shiferaw Tilahun(31) என்ற நபர், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு மற்றவர்கள் பிரச்சனைகள் குறித்து தான் விவாதிக்க விரும்புவார்களே தவிர அவர்களுடைய பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதில்லை.
இன்று முதல் அமெரிக்காவில் குடியேறியுள்ள கருப்பின மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
Teresa Mbagaya(28) என்ற பெண் கூறுகையில், ஆப்பிரிக்க 
மக்களுக்கு ஒபாமா அறிவுரை கூறுவதற்கு முன் தன்னுடைய நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு பிறகு அவர் எங்களை பற்றி அவர் கவலை கொள்ளட்டும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Alifie Amalia(37) என்ற பெண் கூறுகையில், கென்யாவில் இருக்கும் துப்பாக்கி வன்முறையை விட அமெரிக்காவில் தினந்தோறும் நிகழும் துப்பாக்கி சூடு எங்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது என்றார்.
பள்ளி, தேவாலயம் என காணும் இடத்தில் எல்லாம் கருப்பின மக்களாகிய எங்கள் சகோதர, சகோதரிகளை சுட்டு கொல்லும் அந்த வன்முறையை தீர்த்து விட்டு பிறகு ஆப்பிரிக்க நாடுகள் மீது அமெரிக்கா கவனம் செலுத்தட்டும் என அவர் காரசாரமாக பதில் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>







வெள்ளி, 31 ஜூலை, 2015

தமிழர்கள் இன்னும் 30 ஆண்டுகளில் என்ன செய்வார்கள்???

புலம்பெயந்து வாழும் எங்களின் (மரணத்துக்கு பின்பு ) இலங்கைத் தொடர்புகள் முற்றாக அழிந்துவிடும் .
ஏனென்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும், ஊருக்குப் பணம் அனுப்புவதும் எங்களுடன் முடிவடையும், இலங்கைக்கு விடுமுறையில் செல்வதும் எங்களுடன் முடிவடையும்.
அப்பப்பா, அம்மப்பா, அம்மமா, அப்பமா, மாமா, மாமி என்று நேரில் போய் பார்ப்பதும், கோவில் திருவிழாக்களுக்கு போவதும் எங்களுடன் முடிவடையும். எங்கள் ஆயுளுக்கு பின் எங்கள் பிள்ளைகள் ஏன் அங்கு போவாகள்? எம் அடுத்த சந்ததி இங்கே 
வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும், அங்கு பணம் அனுப்ப அவர்களுக்கு யாரும் இல்லை, போன் கதைக்க யாரும் இல்லை, அவர்கள் அங்கு tour போகும்போது எதாவது ஹோட்டலில் இருந்து நிலாவரை கிணத்தையும், கீரிமலை,சிகிரியா எல்லாத்தையும் ரசித்துவிட்டு ஒரு வேற நாட்டுகாரர் மாதிரி மட்டும் enjoy பண்ணமுடியும்.
அதோடு நிறைய காசும் 1 நாள் விமானபயணம் செய்து அங்கு ஏன் போவார்கள்? அவர்களுக்கு வரும் girl அல்லது boy friend விரும்புவார்களா? என்ன கொடுமை !!!! எங்களுடன் எங்கள் பிறந்த நாடு 
மறக்கப்படுகிறது... இப்போது நாங்கள் மலேசியா,சிங்கப்பூர் வாழ் தமிழரை எப்படி பார்க்கிறோமோ அதைப்போல எங்கள் பேரப்பிள்ளைகள் இனி யாழ்ப்பாணத்தையும் ஒரு தமிழ் இனம் வாழும் இடமா உலகப்படத்தில் காட்டுவார்கள் !!
- ஆக்கம் பிரகாஸ் ... ( தவிர்க்க முடியாத உண்மை )
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 22 ஜூலை, 2015

பொலிசை மார்பகத்தால் தாக்கிய பெண்னுக்கு சிறை தண்டனை கிடைக்குமா? (காணொளி )

ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் பொலிசாரை மார்பகத்தால் தாக்கிய பெண்ணை குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஹாங்காங் நகரில் உள்ள யூன்லாங் பகுதியில் இரட்டை வர்த்தக முறை கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக நிக் லாய்-யிங் (30) என்ற பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
அப்போது, சான் என்ற பொலிஸ், தன்னிடம் இருந்த கைப்பயை பறிப்பதற்கு பதிலாக வேண்டுமென்றே தனது மார்பகங்களின் மீது கை வத்தார் என லாய் யிங் புகார் தெரிவித்தார்
இதுதொடர்பான வழக்கு ஹாங்காங் நீதிமன்றத்தில் நடந்துவந்ததையடுத்து, வன்முறை தொடர்பாக வெளியான வீடியோவில், பொலிஸ்காரர் அப்பெண்ணின் மார்பகங்களில் கை வைக்கவில்லை, மாறாக அப்பெண்ணே தனது மார்பகங்களால் சானை தாக்கியிருப்பது தெரியவந்தது.
எனவே அவர் கூறிய குற்றச்சாட்டு பொய் என்பதால், இதுவும் ஒரு வித தாக்குதலே என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார், மேலும் அவரை குற்றவாளி எனவும் அறிவித்துள்ளார்.
தற்போது லாய் யிங்கிற்கு தண்டனை எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாத இறுதியில் அவருக்கும் சிறைதண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பெண்கள் சாலையில் பயங்கரமாக தாக்கிகொண்ட டனர் (காணொளி )

அயர்லாந்து நாட்டில் பெண்கள் இருவர் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் சண்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒருவர் தலைமுடியை மற்றொருவர் பிடித்து பயங்கரமாக தாக்கிகொண்டனர். இந்த சண்டை முன்னரே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று கூறப்படுகிறது.
200க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சிறுமிகளும் அவர்களை சூழ்ந்துகொண்டு ஏளனம் செய்தபடி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.
இவர்கள், சாலையையும் மற்றவர்கள் செல்லமுடியாதபடி ஆக்ரமித்திருந்தனர். இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் இது தொடர்பாக இரண்டு சிறுமிகளையும் 37 வயது மதிக்கத்தக்க ஒருவரையும் கைது செய்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அதிர்ஷ்டகார மனிதர்: பணமழையில் நனைந்த அதிசயம் (காணொளி )

கனடாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரியில் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் கிடைத்துள்ளதால் அவர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார்.
கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தை சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி என்பவர் தான் வேலைபார்க்கும் Amherst Shore என்ற கடையில், தன்னுடன் வேலைபார்க்கும் டயானா மில்லர் என்பவருடன் இணைந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.
அதில் இவருக்கு நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது, டயானா மில்லருக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
தற்போது இவரை உலகின் அதிர்ஷ்டகார மனிதர் 
என்று அழைக்கின்றனர், ஏனெனில் தனது வாழ்நாளில் இரண்டு முறை இடி, மின்னல் தாக்கியும் உயிர்பிழைத்துள்ள இவருக்கு அடுத்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
மேலும் இவரது மகளும் மின்னல் தாக்கி உயிர்பிழைத்துள்ளார், 
தற்போது இவ்வளவு தொகை இவருக்கு பரிசாக கிடைத்துள்ளதால் தனது பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.
மேலும், தனக்கு மிகவும் பிடித்த தொழிலான சமையல் மற்றும் மீன்பிடி தொழிலை செய்யப்போவதாக 
கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

விமானங்கள்:மோதச்சென்ற வேளை நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

108 பயணிகளுடன் சென்ற லுப்தான்சா விமானம் நூலிழையில் பயங்கர விபத்திலிருந்து தப்பியுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா எம்ப்ரேர் இ.ஆர்.ஜே. -195 (Lufthansa Embraer ERJ-195) என்ற விமானம் 108 பயணிகளுடன் முனீச் நகரிலிருந்து போலந்து நாட்டின் வார்சா சென்றது.
அப்போது, வார்சா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வானிலிருந்து உயரத்தை குறைத்து இறங்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது, ஆளில்லா விமானம் ஒன்று லுப்தன்சா 
விமானத்திற்கு எதிரே 100 மீற்றர் தொலைவில் 760 மீற்றர் வேகத்தில் வந்துகொண்டிருந்தது.
இதனால் இரண்டு விமானங்களும் மோதும் நிலை ஏற்பட்டதால்
, லுப்தான்சா விமானி சாதுர்யமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், கட்டுப்பாட்டு அறையுடான தொடர்பை மீறி ஆளில்லா விமானம் பறந்து வந்தது எப்படி என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
50 மீற்றர் உயரத்திற்கு மேல் ஆளில்லா விமானம் பறக்கவிடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் போலந்து நாட்டில் உள்ளது என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>