நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 12 ஆகஸ்ட், 2015

தீவிரவாதிகளுடன் இணைய முயன்ற புதுமண தம்பதி கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேரும் திட்டத்துடன் துருக்கி நாட்டிற்கு புறப்பட்டு சென்ற புதுமண தம்பதியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் சேர 
திட்டமிட்டிருந்தனர். அங்கு சென்றடைவதற்காக முதலில் மிசிசிபி மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் இருந்து துருக்கியில் உள்ள இஸ்தாபுல் நகருக்கு செல்ல டிக்கெட்டுகளை கடந்த வாரம் வாங்கியுள்ளனர்.
ஸ்தான்புல் நகருக்கு சென்ற பின், அங்கிருந்து
 சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேரும் அவர்களது திட்டத்தை அறிந்த அமெரிக்க உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களின் ஒவ்வொரு செயல்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
 இந்நிலையில், துருக்கி புறப்படுவதற்காக கொலம்பஸ் விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்த புதுமண தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதான புதுமண தம்பதியர் ஐ.எஸ்.ஐ.எஸ். ல் சேருவதற்காக துருக்கி செல்லவிருந்ததை ஒப்புக்கொண்டன்ர். சதிச்செயல், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாத இயக்கத்தில் இணைதல், அவர்களுக்கு உதவ பொருட்களை வழங்க முயற்சித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

டொர்செட் நகரத்தின் மேயராக 3 வயது சிறுவன் தேர்வு???

அமெரிக்காவின் வடக்கு மின்னசொட்டா மாகாணத்தின் டொர்செட் நகரத்தின் மேயராக 3 வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான். இவனது 6வது சகோதரனும் இதற்கு முன் 2 ஆண்டுகளாக மேயராக இருந்துள்ளானாம்.அமெரிக்க தேர்தல் விதிமுறையின்படி, யார் வேண்டுமானாலும் ஒரு 
நகரத்தின் மேயராக போட்டியிடலாம். டொர்செட் நகரத்தில் 22 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நகரத்தின் மேயர் தேர்தல் ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 3 வயது சிறுவன் ஜேம்ஸ், நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளான்
மேயர் தேர்தலை பொறுத்த வரை, ஒரு கூடையில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் சீட் எழுதி போடப்படும். குலுக்கல் முறையில் அவர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் அடுத்த ஓராண்டிற்கு அந்நகரத்தின் மேயராக இருப்பார். ஜேம்சின் சகோதரர் ராபர்டும் (6) இதே போன்று தேர்வு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் மேயராக இருந்துள்ளார்.
பால்மனம் மாறாத பச்சிளம் பாலகனான தற்போது மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜேம்சிற்கு, பத்திரிக்கையாளர்களிடம் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அவரது சகோதரர் ராபர்ட் தான் பயிற்சி அளித்து வருகிறாராம். தனது மகன்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

திடீர் நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை தற்காலிமாக நிறுத்தம்

ஜம்முவில்- காஷ்மீர் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில்சமீபத்தில், 
கடும் மழை பெய்து வருகின்றது. பலத்த மழை காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அமர்நாத் யாத்திரை உடனே நிறுத்தப்பட்டது.
இந்த நிலச்சரிவு குறித்து, ஜம்மு போக்குவரத்துக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் கோட்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உதம்பூர் மாவட்டத்தின் கேரி பகுதியில் கடும் மழை
 காரணமாக, கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் பாதுகாப்பு கருதி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக 
நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு அடிவார முகாமிலும், அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. சாலை சீரமைப்புக்கு பின்பு, அமர்நாத் யாத்திரைக்கு 
அனுமதி வழங்கப்படும் என்றார்.
நிலாவரை

புதன், 5 ஆகஸ்ட், 2015

காட்டுத்தீயினால் 13 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் !!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், 20 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். சான்பிரான்சிஸ்கோவில் 90 சதுர மைல் பரப்பில் தீ பரவி 
உள்ளது. காற்றும் கடுமையாக வீசி வருகிறது. 9 ஆயிரம் வீரர்கள் நேற்று முன்தினம் முதல், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 24 வீடுகள்
 தீக்கிரையாகின.
விக்கி எஸ்ட்ரெல்லா என்பவர் பரவி வரும் காட்டுத்தீ பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்நாளில் இப்படி ஒரு தீயை பார்த்தது கிடையாது. 300 அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகி உள்ளது” என்றார். இந்த தீ விபத்தின் 
காரணமாக 13 ஆயிரம் பேரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுமாறு கலிபோர்னியா மாகாண நிர்வாகம் 
அறிவுறுத்தி உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கண்ணாடி துண்டுகள் சிறுநீர் கலந்த தண்ணீர் அருந்திய பெண்???

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.
யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்த அவர் தனது துயரங்கள் குறித்து கூறுகையில், எனது 4 வயது மகனுக்கு வாளை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தனர்.
பயிற்சி முகாமில் என்ன கற்றுக்கொண்டாய் என்று என் மகனிடம் கேட்கையில், கையால் கழுத்தை வெட்டுவது போன்று என்மகன் செய்து காட்டினான்.
மேலும், எனது 14 வயது மூத்த மகளை தீவிரவாதி ஒருவனுக்கு விற்றுவிட்டார்கள், 12 வயது மகனை ஜிகாதி பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
அவர்களின் பாதுகாப்பில் இருந்து நாங்கள் தப்பியோடாமல் இருப்பதற்காக தீவிரவாதிகள் எங்களுக்கு போதைப்பொருள் கலந்த உணவுகளை கொடுத்தனர்.
நாங்கள் குடிக்கும் தண்ணீரில் சிறுநீரும், உணவில் கண்ணாடி துண்டுகளும் கலந்திருக்கும் என்று தெரிவித்தள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>






நடுத்தர வயதில் தந்தையானால் இளம் வயதில் மரணம் !!!

சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் தந்தையாகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக 
தெரியவந்துள்ளது. 25 
வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடுமபத்
 தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தான் நடுத்தர 
வயதில் மரணம் அடைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
22 வயதில் தந்தை ஆகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 26 சதவீதம் உள்ளது என அந்த ஆய்வில் 
தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உங்கள் நாட்டை முதலில் திருத்துங்கள்”:ஒபாமாவிற்கு பதிலடி???

ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்று உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபரான ஒபாமாவிற்கு கென்யா மற்றும் எத்தியோபிய இளைஞர்கள் சூடான கேள்விகள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதிபர் ஒபாமாவின் தந்தை பிறந்த நாடான கென்யாவிற்கு ஒபாமா சில தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்தியுள்ளார்.
ஒபாமாவின் உரையில், ஆப்பிரிக்க மக்கள் மீது தனக்குள்ள அன்பு மற்றும் மனித உரிமைகளை பற்றி ஒபாமா உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.
கென்யாவில் உள்ள நைய்ரோபியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், ஒபாமாவின் உரை அந்நாட்டு மக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒபாமாவின் உரை குறித்து பேசிய Shiferaw Tilahun(31) என்ற நபர், பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு மற்றவர்கள் பிரச்சனைகள் குறித்து தான் விவாதிக்க விரும்புவார்களே தவிர அவர்களுடைய பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதில்லை.
இன்று முதல் அமெரிக்காவில் குடியேறியுள்ள கருப்பின மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
Teresa Mbagaya(28) என்ற பெண் கூறுகையில், ஆப்பிரிக்க 
மக்களுக்கு ஒபாமா அறிவுரை கூறுவதற்கு முன் தன்னுடைய நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு பிறகு அவர் எங்களை பற்றி அவர் கவலை கொள்ளட்டும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
Alifie Amalia(37) என்ற பெண் கூறுகையில், கென்யாவில் இருக்கும் துப்பாக்கி வன்முறையை விட அமெரிக்காவில் தினந்தோறும் நிகழும் துப்பாக்கி சூடு எங்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது என்றார்.
பள்ளி, தேவாலயம் என காணும் இடத்தில் எல்லாம் கருப்பின மக்களாகிய எங்கள் சகோதர, சகோதரிகளை சுட்டு கொல்லும் அந்த வன்முறையை தீர்த்து விட்டு பிறகு ஆப்பிரிக்க நாடுகள் மீது அமெரிக்கா கவனம் செலுத்தட்டும் என அவர் காரசாரமாக பதில் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>