நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 22 ஜூன், 2013

என்.எல்.சி நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் விற்பனை

:
 
 ரூ.466 கோடி லாபம்  பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக என்.எல்.சியின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த பங்குகளில் குறைந்தபட்சமாக 10 சதவீதம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை 2013 ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள் (செபி) வலியுறுத்தியிருந்தது.
இதன் காரணமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) பங்குகளில் 5 சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்கவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டதால் இதனைப் பற்றி பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை குழு பரீசீலனை செய்தது.
ஆனால் தமிழகத்தை சார்ந்த கட்சிகளும், என்.எல்.சி நிறுவன தொழிற்சங்க நிறுவனங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார். அதில் என்.எல்.சியிலிருந்து நிலக்கரி உற்பத்தி மட்டுமின்றி மின்சார உற்பத்தியும் செய்யப்படுகிறது. இதன் பங்குகளை விற்பதன் மூலம் மின் உற்பத்தி பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தில் இருந்து மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படும்.
மேலும் அந்நிறுவன தொழிளாளர்கள் போராட்டம் நடத்தக்கூடும், இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு பங்குசந்தை பட்டியலில் இருந்து என்.எல்.சியை நீக்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படுவதில் இருந்து சிறப்பு விலக்கு அளிக்க பங்குகள் ஒப்பந்த கட்டுப்பாடு விதிமுறை 1957- யை திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்பட இருந்தது. ஆனால் இறுதியில் இது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செபியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டத்தில் என்.எல்.சியின் ரூ.7.8 கோடி பங்குகளை அல்லது 5 சதவீத பங்குகளை விற்கலாம் என்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவிடம் பங்கு விற்பனை துறை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்.எல்.சியில் மத்திய அரசுக்கு தற்போது 93.56 சதவீத பங்குகள் உள்ளன. மும்பை பங்கு சந்தையில் என்.எல்.சி பங்கு தற்போது ரூ.59.80க்கு விற்கப்படுகிறது. எனவே 5 சதவீத பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.466 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது
 

வெள்ளி, 21 ஜூன், 2013

பெண்னை நாய், மற்றும் பாம்புகளுடன் பூட்டி வைத்து ??


அமெரிக்காவிள்ள ஒஹியோ நகரில் வீடொன்றில் மனநிலை குன்றிய தாயையும் அவரின் பிள்ளையையும் சரியில்லாத  பாம்புகள், நாய்களுடன் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்களை இரண்டு வருடங்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளர்.
எனினும் பாதிப்படைந்த பெண்ணின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை.
பாம்பு, நாயுடன் தங்கியிருக்கும் போது குழந்தையுடன் தாயை சேர விடாமல் தடுத்தனர். எனினுமம் தனது குழந்தைக்கு ரகசியமாக உணவு, தண்ணீர் கொடுத்திருக்கிறார் அந்த தாய்.
பலமுறை பெண்ணை பாம்புகளும், நாயும் கடித்திருக்கிறது. இதற்காக அந்த பெண்ணுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுத்திருக்கிறார்கள்.
அந்த பெண் எப்படியோ வெளியே தப்பி வந்தது இனிப்பு பொருட்களை திருடியதாக பொலிஸில் சிக்கினார். அப்போது அவர் ‘என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள். வீட்டிற்கு போக விரும்பவில்லை’ என்று பொலிஸாரிடம் கெஞ்சியிருக்கிறார்.
ஒன்றாக தங்கியிருக்கும் நண்பர்களே தன்னையும், குழந்தையையும் சிறைவைத்து அளித்த கொடுமைகளை அம்பலப்படுத்தினார்.
இந்த கொடுமை தொடர்பாக 26 வயது Jordie Callahan என்ற பெண்ணும், 31 வயது Jessica Hunt  மற்றும் 33 வயது Daniel Brown ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பொலிஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

வியாழன், 20 ஜூன், 2013

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3-குற்றவாளிகளின்


டொரண்டோவில் இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.இந்த சம்பவம் சென்ற ஏப்ரல் 5ஆம் திகதி நடந்தது என்றும் தற்போது குற்றவாளிகளின் புகைப்படம் கிடைத்துள்ளதாகவும் டொரண்டோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதிகாலை மூன்று மணியளவில் டொரண்டோவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் Gloucester Street, east of Yonge Street, வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த மூன்று மர்ம நபர்கள், அந்த பெண்ணை குறித்து மோசமான கமெண்டுகள் கூறியபடி வந்துள்ளனர்.
பின்னர் திடீரென அவரை தூக்கிக் கொண்டு Norman Jewison Park அருகேயுள்ள மறைவான இடத்தில் மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மாயமாக மறைந்து விட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய அடையாளத்தை அடுத்து டொரண்டோ போலீஸார் குற்றவாளிகள் மூன்று பேர்களில் இரண்டு நபர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
முதல் குற்றவாளி சுமார் 30 வயதுடையவன் என்றும், சுமாரான உடலமைப்பும், அடர்ந்த பிரெளன் நிற முடியும், டார்க் கலரில் பேண்ட்டும், டி சர்ட்டும் அணிந்திருந்தான்.
இரண்டாம் குற்றவாளி சுமார் 20 வயதுடையவன் என்றும், ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்துடனும், ஒல்லியான உடலமைப்பை உடைய இவன், கிரே கலரில் உடை அணிந்திருந்தான்.
மூன்றாம் குற்றவாளி 20வயதுடையவன் என்றும், ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்தில் சுமாரான உடலமைப்பை கொண்டவன் என்றும், டார்க் நிற உடையணிந்து அதற்கு மேலே கோட் அணிந்திருப்பான் என்றும் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே 416-808-7474 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 

செவ்வாய், 18 ஜூன், 2013

சிறிது நேரத்தில் இறந்து விடுவீர்கள்: நடுவானில் பரபரப்பு

 
விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரபு நாட்டில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் 116 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் ஹாங்காங் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருக்கிறேன். எல்லோரும் சிறிது நேரத்தில் சாக போகிறீர்கள் என்று கூறினார்.
இதனால் விமானத்தில் இருந்த பணிகள் அனைவரும் பீதியடைந்தனர். இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
எனினும் விமானத்தை நடுவழியில் தரையிறக்காமல், விமானி நியூயார்க் சென்று, லிபர்ட்டி ஏர்போர்ட்டில் தரையிறக்கினார்.
அங்கு விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள், ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். அதற்குள் விஷம் பரவி இறந்து விடுவோமோ என்ற பீதியிலேயே பயணிகள் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் விரைந்து சென்று பீதி கிளப்பிய வாலிபரை மடக்கி அழைத்து சென்றனர்.
இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த சான் பிரான்ஸ்சிஸ்கோ பல்கலை மாணவர் மெரில் ஆமோஸ் கூறுகையில், விமானம் புறப்படும் முன்பாக ரெஸ்டாரன்டில் பயணிகள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அங்குள்ள கண்ணாடி வழியாக நீண்ட நேரம் அந்த வாலிபர் பயணிகளை பார்த்து கொண்டிருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்று தெரியவில்லை என்றார்.
வாலிபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. விமான பயணிகளை உடனடியாக பரிசோதித்து பார்த்தனர், உணவில் விஷம் எதுவும் கலந்திருக்கவில்லை என்பது உறுதியானது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
 

காட்டுத் தீ; சிங்கப்பூர், மலேஷியாவில் புகை சூழ


 வரலாறு காணா அலவு சுமத்ரா காடுகளில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கடும் புகை சூழ்ந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட பனிமூட்டம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காடுகளில் திடேரென ஏற்பட்ட தீயால் பெரும் காடுகள் பற்றி எரிகின்றன.
இதனால் இரவு பகலாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயினால் ஏற்பட்ட புகை, சிங்கப்பூரை சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலம் மலேசியாவிலும் பரவி வருகிறது. கடும் புகை மண்டலத்தால் மக்கள் கண் எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் ஏற்படும் புகையினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது

வெளிநாட்டு தலைவர்களை பிரிட்டன் ரகசியமாக உளவு பார்த்தது அம்பலம்


ஜி20 மாநாட்டிற்கு வந்த தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக 2009-ம் ஆண்டு ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் லண்டனில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பயன்படுத்துவதற்காக சிறப்பு இன்டர்நெட் மையங்களை பிரிட்டன் உளவுத் துறை அமைத்துள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள், யார் யாருடன் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க 45 பேர் கொண்ட குழுவை பிரிட்டன் உளவுத் துறை நியமித்துள்ளது.
துருக்கி நிதியமைச்சர் மெஹ்மத் சிம்செக், தென்னாப்பிரிக்க தலைவர்கள் உள்பட 15 பேரது செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளிநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள், அவர்கள் தங்கள் நாட்டுடன் பரிமாறிக் கொண்ட மின்னஞசல்கள் மற்றும் மடிக்கணனிகளில் உள்ள தகவல்களை ரகசியமாக பதிவு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதனிடையே ஜி8 நாடுகளின் மாநாடு பிரிட்டனில் நேற்று தொடங்கியுள்ளது.
எனவே உளவு பார்த்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கமளிக்க வேண்டுமென்று மாநாட்டில் பங்கேற்கும் பிற நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா

 
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து வெளியாகும் நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் பஷர் அல் ஆசாத் கூறியுள்ளதாவது:-
எனது ஆட்சிக்கு எதிராக போராடி வரும் கலகக்காரர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை அளித்தால், நாளடைவில் கொல்லைப்புறம் வழியாக அந்த நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கும்.
தற்போதைய செயல்களுக்காக பின்நாளில் அந்த நாடுகள் எல்லாம் பெரும் விலையை தர வேண்டியதாகி விடும். கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
இந்த தீவிரவாதிகள் பிரிவினை கொள்கையுடன் ஐரோப்பிய நாடுகளின் அரசுக்கு எதிராக கடுமையான உள்நாட்டுப் போரில் ஈடுபடுவார்கள்.
எனது மக்களுக்கு எதிராக நான் ரசாயன ஆயுதங்களை உபயோகிப்பதாக குற்றம் கூறும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள், தங்களது கூற்றுக்கு ஆதாரம் இருந்தால் அதை உலக மக்களின் முன்பு நிரூபிக்க வேண்டும்.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி எங்கள் ராணுவம் 150 பேரை கொன்றுவிட்டதாக இந்த நாடுகள் அபத்தமான பொய்யை கூறி வருகின்றன.
ரசாயன ஆயுதம் என்பது, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான். இவற்றை பயன்படுத்தி 150 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று இந்த நாடுகள் குற்றம் சாட்டுவதை வைத்தே இவர்கள் கூறுவது அபத்தமான பொய்தான் என்பது உலகிற்கு தெரியும் என அசாத் குறிப்பிட்டுள்ளார்