நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 30 நவம்பர், 2014

ராட்சத' ராக்கெட்: ஜிஎஸ்எல்வி ‘மார்க் 3 டிசம்பரில் விண்ணில் ஏவி சோதனை

 ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதள இயக்குநர் பேட்டி ஸ்ரோ உருவாக்கியுள்ள ஜிஎஸ் எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட் டிசம்பர் 3-வது வாரத்தில் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான ஆராய்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சி ரூ.13 ஆயிரம் கோடியில் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 சோதனை ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது....

ஞாயிறு, 23 மார்ச், 2014

வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

அமெரிக்காவின் கொலம்பியா புறநகர் பகுதியான பால்டிமோரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று ஒரு மர்ம ஆசாமி புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து எதிர் தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். இதில் ஒருவன் அருகில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து கிடந்தது. எனவே, அவன் தாக்குதல் நடத்திய ஆசாமியாக இருக்கலாம் என்று...

சனி, 1 மார்ச், 2014

பல்பாருள் அங்காடியில் பந்தாடிய கத்தி

கனடாவின் எட்மன்டன் வடமேற்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.இத்தாக்குதல் வெஸ்ரேன் குறொசர்ஸ் உள்ள பல்பொருள் அங்காடியில் நடைபெற்றுள்ளது. அங்கு 200 பேர்கள் வரையில் வேலை செய்கின்றனர். இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். இதில் 29 வயதுடைய ஜேமி பசீக்கா என்ற பல்பொருள் அங்காடி ஊழியரே இக்கொலைக்கான சந்தேக நபர் என பொலிசாரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்...

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இராணுவப்படை வீரர்களின் தலையை துண்டித்த தலிபான்கள்

பாகிஸ்தானில் எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து தலிபான்கள் கொலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான்களின் ஒரு பிரிவினரான முகமது ஏஜென்சி நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த 2010ம் ஆண்டில் கடத்திய எல்லை இராணுவப் படையை சேர்ந்த 23 வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்யப்படாத பட்சத்தில்,...

திங்கள், 10 பிப்ரவரி, 2014

அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரானிய யுத்த கப்பல்கள்

ஈரானின் பல யுத்தக்கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பு எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஈரானிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரானிய கடற்படை அதிகாரியான அட்மிரல் அப்ஷின் ரெஸாயீ ஹதாத்தை மேற்கோள் காட்டி ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு...

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இலங்கையர் உட்பட 2000 பேர் சவூதியில் கைது

 சவூதி அரேபியா வழங்கிய பொதுமன்னிப்பு காலத்தில் அங்கிருந்து வெளியேறாது தொடர்ந்தும் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் உட்பட இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த வாரம் சவூதி அரேபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, ஏமன், எகிப்து, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக சவூதியில் தொழில் புரிந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்கிருந்து நாடு...

புதன், 29 ஜனவரி, 2014

பிரான்சில் வெள்ளம்: மக்கள் வெளியேற்றம்

பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் தென் கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதுவரையிலும் 2 பேர் பலியாகி உள்ளனர், 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர் அதிகாரி Laurent Cayrel, தனது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லும்...

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஜனாதிபதி மனைவியை விவகாரத்து செய்தார்..

. பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒலாந்த் ஏற்கனவே திருமணமாகி மனைவி செகோலின் ராயலை விவாகரத்து பெற்றிருந்தார், அந்த திருமணம் மூலம் 4 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜனாதிபதி ஒலாந்த் வாழ்ந்து வரும் காதலியும் இரண்டாவது தடவை விவாகரத்து ஆனவர், இவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் ஜனாதிபதியுடன் சேர்ந்து வாழ்வதால் பிரான்சின் முதல் பெண் என்ற அந்தஸ்து பெற்றுள்ளார். இந்த...

வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஆட்டம் காண வைத்த நிலநடுக்கம் (காணோளி இணைப்பு)

  வரலாற்றில் இன்றைய தினம்- சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் பலியாயினர் 1857: தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைகழகமான கொல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது 1927: ஆல்பிரட் ஹிட்ச்கொக்(Alfred Hitchcock) தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்        1939: சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் பலியாயினர்         1972:...

புதன், 22 ஜனவரி, 2014

உலக பொருளாதார மாநாடு தொடங்கியது

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் 44வது மாநாடு தொடங்கியது.உலக பொருளாதார அமைப்பின் 44வது மாநாடு டாவோஸ் நகரில் நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அரசு தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வங்கி நிபுணர்கள், சமூகநல ஆர்வலர்கள் என 2,500 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டை, ஈரான் விவகாரம் உள்ளிட்டவை குறித்து முக்கிய...

ஹாங்காங்கில் ரூ.4 கோடிக்கு ஏலம் போன மதுபானம்

ஹாங்காங்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ஏலத்துக்கு வந்தது. இது 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது ‘தி மக்காலன்’ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் அந்த பாட்டில் சுமார் ரூ.4 கோடிக்கு (6,28,205 டாலர்) ஏலம் போனது. இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனிநபர் ஏலம் எடுத்தார். அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும்...

வியாழன், 9 ஜனவரி, 2014

விண்வெளி நிலையத்தின் ஆயுள் 4 வருடங்களால் நீடிப்பு...

பூமியை பற்றி ஆராய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டு முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம் ஆண்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பூமிக்கு மேலே 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும் 2020-ம் ஆண்டு வரை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் ஆயுளை 4 வருடங்களுக்கு நீட்டித்து 2024 ஆண்டுகள் வரை நீடிக்க அமெரிக்காவின் ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது. இதைப்போன்று...