நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 26 டிசம்பர், 2016

தமிழர் ஒருவர்பாரிஸ் நகரில் கத்திக்குத்து பலி!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தமிழகம் கும்பகோணத்தை சேர்ந்த 26 வயதான மணிமாறன் என்பவரே இவ்வாறு படுகொலை  செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நண்பரை பார்ப்பதற்காக பாரிஸ் வாகிரார்ட் மெட்ரோ புகையிரத நிலையத்தை வந்தடைந்த மணிமாறனை, இனந்தெரியாத நபர்கள் கொடூரமான முறையில் கத்தியால்  குத்தியுள்ளனர். எனினும்,...

திங்கள், 19 டிசம்பர், 2016

அன்பாந்த பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!!!.

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு  நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர். வரும்...

புதன், 14 டிசம்பர், 2016

பயணிகளுக்கு தொல்லை கொடுத்த பெண் விமானத்தில்இருந்து வெளியேற்றப்படார்?

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவரை அங்குள்ள பொலிஸ்  இழுத்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இங்கு புறப்பட தயாராக நின்ற டெல்டா விமானத்தில் பெண்மணி ஒருவர் திடீரென்று புகுந்து தமது இருக்கைக்கு நேர் மேலே இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதியில் தனியாக அதிக இடம் வேண்டும் என கேட்டு...

வெள்ளி, 9 டிசம்பர், 2016

இது மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா ? அச்சத்தில் மக்கள்

கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக  பரவி வருகிறது. கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக...

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவிலுள்ள பெட்போர்ட் என்னும் இடத்தில் உள்ள யார்ல் வூட் தடுப்பு முகாமை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று (03/12/16) யார்ல் வூட் தடுப்பு முகாமை சுற்றி மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Movement for justice என்னும் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற தமிழர் அமைப்புகளும் தமது ஆதரவை வழங்கியது. அகதிகளின் பிரச்சனைகளுக்கு எதிராக, அகதிகள் தொடர்பான பிரித்தானியா...

கிராம மக்களுக்கு ராணுவ வீரர் அளித்த பரிசு என்ன தெரியுமா?

ஜேர்மன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய கிராம மக்களுக்கு அவரது இறுதி நாளில் செய்துள்ள நன்றிக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த நேரத்தில் ஜேர்மனியை சேர்ந்த Heinrich Steinmeyer(அப்போதைய வயது 19) என்ற ராணுவ வீரர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஸ்கோட்லாந்து நாட்டில் உள்ள Comrie என்ற சிறிய கிராமத்தில் கைதியாக அடைக்கப்பட்டார். இக்கிராமத்தில் உள்ள Cultybraggan முகாமில் அடைக்கப்பட்ட...

திங்கள், 28 நவம்பர், 2016

கார் ஏற்றி பொலிஸ்சாரை கொன்றுவிட்டு தப்பிய குற்றவாளி கைது !

பிரான்ஸ் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு பிரான்ஸில் உள்ள Tarascon-sur-Ariege நகரில் பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது, தூரத்தில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. காரை இடைமறித்து நிறுத்த பொலிசார் முயன்றுள்ளனர். ஆனால், வேகமாக...

சனி, 26 நவம்பர், 2016

தற்போது லண்டனில் தொழில் புரிபவர்களுக்கு வந்தது அதிஸ்ரம?

பிரித்தானியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்  வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில் 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளம் 7.20 பவுண்டுகளாகவும், 21 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்கு 6.95 பவுண்டுகளாகவும், 18 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 5.55 பவுண்டுகளாகவும்  உள்ளது. இந்த குறைந்தபட்ச சம்பள உயர்த்தி...

வியாழன், 24 நவம்பர், 2016

தனது பூனை இறந்ததற்கு 2½ கோடி ரூபா நஷ்டஈடு கேட்கும் பெண்`?

பாகிஸ்தானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுந்தஸ்கோரின் வளர்ப்பு பூனை இறந்தமைக்கு நஷ்ட ஈடாக ரூபா 2.5 கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கறிஞர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அங்குள்ள கால்நடை வைத்தியரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. நோய் மேலும் அதிகரித்தது. இதனால் பூனையை வேறு வைத்தியரிடம் கொண்டு சென்றார். அதற்குள் பூனை இறந்து விட்டது.  ஏற்கனவே...

வியாழன், 17 நவம்பர், 2016

செத்த எலி ஆடைக்குள் ஆடை விற்பனை நிலையத்துக்கு எதிராக யுவதி வழக்கு!.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தான் வாங்­கிய ஆடையில் மடித்து தைத்த பகு­திக்குள் இறந்த எலி­யொன்று கிடந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துடன், வழக்கும் தொடுத்­துள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த கெய்லி பிசெல் எனும் 24 வய­தான இந்த யுவதி, “ஸாரா” எனும் ஸ்பானிய ஆடை விற்­பனை நிறு­வ­ன­மொன்­றி­ட­மி­ருந்து மேற்­படி புதிய ஆடையை வாங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார். 40 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு (சுமார் 6000 ரூபா) வாங்­கப்­பட்ட இந்த ஆடையை சில வாரங்­களின்...

புதன், 9 நவம்பர், 2016

இரு மடங்காக அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவேன்!

அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்று நாட்டின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி  வருகின்றனர். இந்த வெற்றியை அடுத்து நியூயார்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் உரையாற்றினார். அப்போது...

செவ்வாய், 8 நவம்பர், 2016

அடுத்த அமெரிக்காவின் அதிபராக டொனால் டிரம்ப் தேர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகளுடன் வெற்றபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் 276 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஹிலரி கிளின்டனுக்கு 218 அதிபர் மன்ற வாக்குகள் கிடைத்துள்ளன. தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலரி கிளின்டனை விட 58 ஆசனங்களை மேலதிகமாக பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி  பெற்றுள்ளார். அமெரிக்க அதிபராக பதவி...

ஞாயிறு, 6 நவம்பர், 2016

எச்சரிக்கை பிரித்தானியா நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது ?

பனியின் தாக்கம் இரவு நேரங்களில் உச்சத்தை அடையும் என்பதால் பிரித்தானிய நாட்டு மக்கள் தங்கள் விழா கொண்டாட்டத்தை சீக்கிரம் முடித்து கொள்ளுதல் நலம் என அந்த நாட்டின் வானிலை மையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டில் பாரம்பரியமாக BoneFire Night என்னும் வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நவம்பர் மாதங்களின் இரவு நேரங்களில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று அந்த நிகழ்ச்சிகளை சிறப்பிப்பார்கள். இந்த நிலையில் அங்கு பனியின்...

சனி, 29 அக்டோபர், 2016

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அ னை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள்...

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஹெலிகப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய 19 பேர் பலியான பரிதாபம்!.

ரஷ்யா நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைபீரியாவில் இருந்து நேற்று Mi-8 என்ற ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று 22 பேருடன்  புறப்பட்டுள்ளது. சில மணி நேரப்பயணத்திற்கு பின்னர் Yamal Peninsula என்ற பகுதியில் தரையிறங்க முயன்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. ஹெலிபேட் அமைந்துள்ள இடம் சரியாக தெரியாததால் ஹெலிகொப்டர் தாறுமாறாக சுழன்றுள்ளது. பின்னர், கண் இமைக்கும்...

புதன், 19 அக்டோபர், 2016

இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்சில் படுகொலை`

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்,...

திங்கள், 17 அக்டோபர், 2016

தமிழ் மொழியை அவுஸ்திரேலியாவில் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள கோரிக்கை!

அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான பிரேரணையை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளார். தமிழ் கல்வியும், கலாசாரமும் இந்தியா மற்றும் அவுஸ்திரேயாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் முழுவதும்...

நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் நிதி!

நாட்டின் அகதிகள் நெருக்கடியை சமாளிக்க பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம், நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அனைத்து அகதிகளுக்கும் தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சனிக் கிழமை ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் உட்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டின் ஜனவரி...

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஈழத்தமிழர் .அவுஸ்திரேலிய இராணுவ மேஜரான ர் !!!

அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தின் மேஜராகி ஈழத் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.  அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா எனப்படும் குறித்த நபர் தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19...

சனி, 1 அக்டோபர், 2016

தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது!

யேர்மனி டோட்முண்ட நகரில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது என தெரியுசெய்யுப்பட்டு விருதளிக்கப்பட்டுள்ளது கோணர் என்னும் பியர் நிறுவணத்தினரால் இரண்டாவது ஆண்டாகவும் தெரிவாகியுள்ளது தமிழர்களுக்கு பெருமைதரும் நற்  செய்தியாகும் , புலத்தில் எம்மினம் சிறந்து எல்லாத்துறையிலும் விளங்கி வருகின்றனர் அந்த வகையில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடம் என்பது அவருக்கு மகிழ்வு மட்டுமல்ல அங்கே வந்த யேர்மனியர் மகிழ்வு கொண்டாது மட்டுமல்ல அவரின்...

சனி, 24 செப்டம்பர், 2016

உங்க வீட்டு பெண்கள் முகநுாலில் இருக்கிறார்களா .?கவனிங்கள்..!!!

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும். ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே...

புதன், 21 செப்டம்பர், 2016

தமிழர்களால் பி.பி.சி செய்தியாளர் ரூ.97 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொண்டர்!

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு ரூ.97 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றம் அதிரடியாக  உத்தரவிட்டது. பிரித்தானிய நாட்டை சேர்ந்த பி.பி.சி என்ற தனியார் செய்தி நிறுவனத்தில் சந்தனகீர்த்தி பண்டாரா(57) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு யூலை 22-ம் திகதி இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு குட்டி இளவரசர் ஜோர்ஜ்...

புதன், 7 செப்டம்பர், 2016

கார் விபத்ல் கனடாவில் இலங்கை வம்சாவளி தாயும் மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாயும்  அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர்  பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில்...

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஈழத்தமிழர்கள் 5 பேர் பிரித்தானியாக்கடலில் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நேற்றையதினம்   குளிக்கும் போது நீரில் மூழ்கிப் பலியான ஐந்து இளைஞர்களும், ஈழத்தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. ஒன்றாகக் கடலில் மூழ்கிப் பலியான மேற்படி ஐந்து இளைஞர்களும் யார் என்பதையோ அல்லது அவர்களின் அடையாளங்களை எவை என்பதையோ உறுதிப்படுத்த முடியாமல் பிரித்தானிய காவற்துறையினர் நேற்று முதல் திணறி வந்தனர். இந்த நிலையில் தற்போது மேற்படி ஐந்து இளைஞர்களும்,  தென்கிழக்கு லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து...