
கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக்...