நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இலங்கைத் தமிழ்ப்பெண். அவுஸ்ரேலியாவில் முதல்வரானார்

அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர மன்றத்தின், தெற்கு வட்டாரத்தின் உறுப்பினரான சமந்தா ரத்தினம், கிறீன் கட்சியின் சார்பில்  தெரிவானவர். இந்த நகர முதல்வர் பதவிக்கு நடந்த வாக்கெடுப்பில், 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரை, தோற்கடித்து, சமந்தா ரத்தினம் வெற்றி பெற்றார். அவுஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின்...

வியாழன், 29 அக்டோபர், 2015

இலங்கை கூடப் பாதிக்கப்படும்?சீனாவைப் போருக்கு இழுக்கும் அமெரிக்கா!

மலேசியாவிற்கு அண்மையில் ஆழ்கடலில் செயற்கையாக நிர்மாணித்த தீவை, இராணுவத் தேவைகளிற்கான தீவாக  சீனா மாற்றியுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா ஏவுகணை தாங்கிய நாசகாரிக்  கப்பல் எங்களது இறையாண்மை எல்லைக்குள் வரவேண்டாம் என்ற சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அந்தத் தீவிற்கு அண்மையால் பயணம் செய்தது. சீனா சொல்லுவதைத் சொல்லட்டும் தொடர்ந்தும் இனிவரும் வாரங்களில் தாங்கள் இவ்வாறு செய்வோம் என்ற அமெரிக்கப் பதிலடியும் அதன் தாக்கங்கள் பற்றிய பல தகவல்களை...

புதன், 21 அக்டோபர், 2015

புதிய சாதனைகள் கனடாவின் புதிய கீழ்சபையில் ???

கனடாவின் 43-வது புதிய பாராளுமன்றத்திற்கு சாதனைகளாக 10 பழங்குடியினர் எம்பிக்களாக தெரிவு செய்யப் பட்டிருப்பதுடன் அதிக பெண்களும் தெரிவாகி உள்ளனர். கடந்த இரவு இடம்பெற்ற தேர்தலில் 88-பெண் எம்பிக்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இது கீழ்ச்சபையை  மேலும்  வேறுபட்டதாக்கியுள்ளது. 37-ஆசனங்களில் ஆரம்பித்து தேர்தல் இரவு 184 ஆசனங்களை தமதாக்கி கொண்டது லிபரல் கட்சி. பிரச்சாரத்தின் நோக்கம் ஒருபோதும் வெற்றிக்காக இரருக்கவில்லை. பழங்குடியினரின்  மதிப்புக்கள்  ஒட்டாவாவில்...

பொலிசாரால் கனடாவில் தேடப்படும் உயர்மட்ட கடை திருடி!!!

 ரொறொன்ரோ கனடா- பொலிசார் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மீது சுவைகொண்ட பெண் ஒருவரை தேடிவருகின்றனர். ரொறொன்ரோ யோர்க்டேல் மோலில் அமைந்துள்ள ஜிம்மி சூ என்ற கடையை  இரண்டொரு  நாட்கள் இடைவெளியில் இலக்கு வைத்ததை பாதுகாப்பு கமராவில் பதியப்பட்ட காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 11மணியளவில் 2,300டொலர்கள் பெறுமதியுள்ள ஒரு பர்ஸ் திருடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கள்கிழமை பிற்பகலிற்கு  சிறிது முன்பாக  1,500டொலர்கள்...

செவ்வாய், 20 அக்டோபர், 2015

சிலை ஒன்றை இந்தியாவிடம் சிங்கப்பூர்ஒப்படைக்கும் அருங்காட்சியகம்.

சிங்கப்பூரின் அருங்காட்சியகம் ஒன்று தம்மிடமுள்ள பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை ஒன்றை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.இந்தச் சிலை இந்தியாவிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தாம் உணர்வதால் அதைச்  செய்வதாக  அவ்வருங்காட்சியகம் கூறுகிறது.இந்துப் பெண் தெய்வம் ஒன்றின் இந்த வெண்கலச் சிலையை எட்டு ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கைச் சேர்ந்த ஆர்ட் ஒஃப் த பாஸ்ட் கலைப்பொருள் வணிக நிறுவனத்திடம்  இருந்து  சிங்கப்பூரின்...

நடை பெற்ற பொதுத்தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி!

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல  வைத்தனர். ஹரி ஆனந்தசங்கரிக்கெதிராக இனவாதம் கலந்த வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும்,...

வியாழன், 15 அக்டோபர், 2015

ஆயிரக்கணக்கில் மாடுகள் இறந்து கரையொதுங்கியுள்ளன?

பிரேசிலில் ஆயிரக்கணக்கான மாடுகள் கடற்கரையில் இறந்து கரையொதுங்கியதால், துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லெபனான் கப்பல் ஒன்று கடந்த வாரம் 5000 மாடுகள் மற்றும் 750 டன் எண்ணெய்யுடன் பாரா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த போது,   பிரேசில் அருகே விபத்திற்குள்ளாகி மூழ்கியது. கப்பலில் இருந்த மாடுகளும் கடலில் மூழ்கி  இறந்தன. டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால், கடல் உயிரினங்கள் மட்டுமில்லாமல், அப்பகுதி மீனவர்களும்...

செவ்வாய், 13 அக்டோபர், 2015

பாறை சரிந்து குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

பாகிஸ்தானில் கராச்சி குலிஸ்தான் இ ஜாக்குவாரி பகுதியில் நேற்று பாறைச்சரிவு ஏற்பட்டது. சரிந்த பாறைகள் அங்கிருந்த 2 குடிசைகள் மீது விழுந்தன. இதில், குடிசையில் வாழ்ந்து வந்த 2 குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினரும், போலீஸ் படையினரும் விரைந்து சென்று, மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். இதில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 3 பெண்களும்...

சனி, 10 அக்டோபர், 2015

பிலிப்பைன்ஸில் அகதிகளைகுடியேற்ற அவுஸ் நடவடிக்கை?

அவுஸ்திரேலியாவின் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளை பிலிப்பைன்ஸில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மெற்கொண்டு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் பீற்றர் டட்டனை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. நவுறு, மானஸ் தீவுகளிலும் பப்புவா நியுகினியிலும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல அகதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக...

வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தால் ஹம் நகரில் அமைக்கபட்ட ஹிந்துமயானம் திறந்து வைக்கப்படும்

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தால் எதிர்வரும் 01.10.2015 அன்று  முதலாவது ஹம் நகரில் முதலாவது  ஹிந்துமயானம் திறந்து வைக்கப்படும் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் தனது தொடர்  பணியாக ஹம்  நகரில் ஹிந்துகளுக்கான தனி ஹிந்து மயானம் ஒன்றை அமைத்துள்ளது. இதுவரை காலமும் ஜெர்மனி நாட்டில் இறைபதம் அடையும் ஹிந்துக்களுக்கு இறுதி கிரிகைகளோ அல்லது ஹிந்து முறையிலான  எந்தவொரு சடங்கும்  சரியான முறையில்...

சனி, 3 அக்டோபர், 2015

வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தலைநகர் அபுஜாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜி என்ற பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகில் நேற்று இரவு முதல் குண்டு வெடித்தது. அதனை தொடர்ந்து நயன்யா பகுதி பேருந்து நிலையத்தில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.  இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது....

வெள்ளி, 2 அக்டோபர், 2015

துப்பாக்கிச்சூடுட்டில் 13 பேர் பலி- 20 பேர் காயம் (காணொளி இணைப்பு)

அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒரெக்கன் மாகாணத்தில் உள்ள ரோஸ்பெர்க் நகரில் அம்ப்குவா சமூதாய கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக...