நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 30 செப்டம்பர், 2013

கழுத்தில் சுருக்கிட்டுபெண் தற்கொலை

கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு  SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளையில் நைலோன் கையிறை இட்டுவிட்டு கணணியை OFF செய்துவிட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக இவரின் உறவினர்களுக்கு...

சனி, 28 செப்டம்பர், 2013

இரசாயான ஆயுதப் பயன்பாடு தொடர்பாக மறுபடியும்

 சிரியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டமைக்குக் காரணமான இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பாக ஐ.நா சபை அங்கு மறுபடியும் மீளாய்வில் இறங்கியுள்ளது.  ஐ.நா சபையைச் சேர்ந்த ஆயுதப் பரிசோதகர்கள் சிரியாவில் இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப் பட்ட 7 இரசாயன ஆயுதத் தாக்குதல்களை தற்போது ஆய்வு செய்ய முனைந்துள்ளனர். இதில் முக்கியமாக ஆகஸ்ட் 21 டமஸ்கஸ்ஸில் இடம்பெற்ற சம்பவத்துக்குப் பின்னரான 3 தாக்குதல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. மேலும்...

கடவை விபத்து! தொடருந்துக்

தொடருந்துக் கடவை ஒன்றில் வாகனம் பழுதாகிய நிலையில் வாகனத்திலிருந்து இறங்க முடியாது பெண்ணொருவர் விபத்திற்குள்ளாகி உள்ளார். நேற்று 19 மணியளவில் Saint-Emilion (Gironde)  உள்ள கிராமத்தில்  Sarlat மற்றும் Bordeaux இற்குமிடையில்  போக்குவரத்தை மேற்கொள்ளும் பிராந்தியக் கடுகதித் தொடருந்துடன் (TER), Saint-Emilion தொடருந்து நியைத்திற்குச் சிறிது முன்னதாக Libourne இற்கும் Saint-Emilion ற்கும் இடையிலுள்ள RUSTE தொடருந்துக் கடவையிலேயே இந்தப்...

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீண்டும் தாக்குதல் கென்யாவில் பயங்கரவாதிகள்

  கென்யாவின் எல்லைப்பகுதிகளில் சோமாலியா பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கென்யாவின் எல்லைப்பகுதியிலுள்ள மந்தெரா நகரத்தில் தீவிரவாதிகள் நேற்று வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். முன்னதாக புதன்கிழமை இரவு, அங்குள்ள மற்றொரு நகரமான வாஜிரில் தீவிரவாதிகள்...

வியாழன், 26 செப்டம்பர், 2013

உலக நாடுகளுக்கு மலாலாவின் கோரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த வந்த மலாலா மீது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். தலையிலும், கழுத்திலும் குண்டுகுள் பாய்ந்த நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மலாலா மீண்டு வந்தார். இதனை தொடர்ந்து உலக நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...

புதன், 25 செப்டம்பர், 2013

சீனாவில் சூறாவளி : 25 பேர் பலி

 நேற்று சீனாவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 23 பேர் பலியானார்கள். சீனாவின் ஹாங்காங் அருகே உள்ள தெற்கு பகுதி மாகாணமான குவாங்டோங்கில் நேற்று 'யுசாகி' என்ற சூறாவளி தாக்கியது. 180 கி.மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட இந்த சூறாவளி தாக்கியதில் அப்பகுதியில் 7100  வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் அடியோடு சாய்ந்தன. ரோடுகளில் நின்ற கார்கள் உருண்டன. இந்த இடிபாடுகளில் சிக்கியும், வெள்ள நீரில் மூழ்கியும், காற்றில் தூக்கி வீசப்பட்ட பொருட்கள் தாக்கியதிலும்...

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வாஷிங்மிஷினில் மறைந்திருந்த இரு குழந்தைகள் பலி

சீனாவின், கியோசி நகரிலுள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள், வாஷிங்மிஷினில் ஒளிந்த கொண்டிருந்தபோது மூச்சு திணறி இறந்தனர். வீ்ட்டில் இரண்டு மற்றும் மூன்று வயது கொண்ட இரு ச‌கோதரிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். தாய் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருக்க, தந்தை இசையை ரசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், குழந்தைகள் இருவரும் திறந்திருந்த வாஷிங்மிஷினுக்குள் புகுந்து, மூடிக் கொண்டனர். அப்போது ஏற்பட்ட மூச்சு திணறலால் அவர்கள் இருவரும்...

திங்கள், 23 செப்டம்பர், 2013

தீவிரவாதிகள் தாக்குதல் : பலி எண்ணிக்கை 60ஆக

                         கென்யாவின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 1998-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது அப்போது அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும்...

தற்கொலை படைத் தாக்குதலில் 16 பேர் பலி

   ஈராக் நாட்டில் நேற்று தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். இராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள டோராவில், சன்னி அமைப்‌‌‌பினரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். மேலும் 35 பேர் பலத்த காயமடைந்தனர். முன்னதாக நேற்று முன் தினம் இராக்கில் நடைபெற்ற ஷியா பிரிவின் இறுதி ஊர்வலத்தின் போது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்...

வியாழன், 19 செப்டம்பர், 2013

கிணற்றில் சிக்கியிருந்த பெண் 15 நாட்களின்பின்பு மீட்பு

கிண­றொன்றில் விழுந்த பெண்­ணொ­ருவர் 15 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்­படி பெண் ஹெனான் மகா­ணத்­தி­லுள்ள ஸொங்பெங் கிரா­மத்­தி­லுள்ள 12 அடி ஆழ­மான கைவி­டப்­பட்ட கிணற்றில் விழுந்­துள்ளார். அவர் சோளத்தை உண்டும், மழை நீரை அருந்­தியும் உயிர் பிழைத்­தி­ருந்­துள்ளார். இத­னை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அவர் மீட்புப் பணி­யா­ளர்­களால் மீட்­கப்­பட்­டுள்ளார். அந்தக் கிணறு...

திங்கள், 16 செப்டம்பர், 2013

அஸாஞ்சே கட்சி தோல்வி அவுஸ்திரேலியாவில்

 நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார். விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார். இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில்...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விண்ணில் ஏவியது மிகவும் செலவு குறைந்த ராக்கெட்டை

  ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது. எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது. 37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர்...

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பிரதமரிடம் நோர்வே வாழ் பெற்றோர்

  எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம் நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காப்பகங்களில் சிக்கியுள்ள தமது பிள்ளைகளை தம்மிடம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். நோர்வேயின்...

திங்கள், 9 செப்டம்பர், 2013

உலகைச் விமானத்தில் சுற்றிவந்து சாதனை படைத்த இளைஞன்!

  அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானத்தில், தனியாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த, ரேயான் கேம்பல், 19 விமானம் மூலம், தனியாக உலகை சுற்றி வர திட்டமிட்டார். இலகுரக விமானத்தில், ஜூன், 30ம் திகதி அவுஸ்திரேலியாவின், நியூ வேல்ஸ் பகுதியில் இருந்து தன், சுற்றுப் பயணத்தை துவங்கினார். தொடர்ந்து 70 நாட்கள் விமானத்தில் பயணித்த ரேயான், உலகின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்து, தன் பயணத்தை வெற்றிகரமாக...

மூன்று நாள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!

திட்டமிட்டதைவிட அதிக தீவிரமாக சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. மூன்று நாள்களுக்கு தாக்குதல் நடத்த ராணுவத் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அந்நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: சிரியாவில் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட இலக்குகளில் ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கவும், இத்தாக்குதலில் தப்பிய இலக்குகளின்மீது...

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மகாராணியின் இல்லத்துக்குள் நுழைந்து

  பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி, பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள் கிழமை இரவு ஒரு நபர் உட்புகுந்துள்ளார். அரண்மனையில் உள்ளே இருக்கும், அரசத் தலைவர் சமூகமளிக்கும் தர்பார் அரையில் இந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். பொதுவாக பகல் நேரத்தில் இந்த அறை பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும்....

சனி, 7 செப்டம்பர், 2013

உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு

உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. 130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற...

தாக்குதல்: ஜி-20 நாடுகளிடையே கருத்து முரண்பாடு

    சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்காவின் திட்டம் குறித்து ஜி-20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள சர்வதேசத் தலைவர்களுக்கு ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார். இந்த விருந்தின்போது, அவரும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிரியா விவகாரம் குறித்துப்...

வியாழன், 5 செப்டம்பர், 2013

10 வருடங்களாக பாலியல் மூன்று பெண்களை கடத்தி கொடுமைகள் ?

மூன்று பெண்களைக் கடத்திச் சென்று 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்சிறை வைத்து பாலியல் கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ என்ற நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணச் சிறையில் தீவிர கண்காணிப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஏரியல் காஸ்ட்ரோ, செவ்வாய்க்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2002 முதல் 2004 வரை 3 பெண்களைக் கடத்திச் சென்று...

புதன், 4 செப்டம்பர், 2013

முடக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் இணையத்தளம்

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ள இந்த சண்டையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று அரசு துருப்பு ரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதில் 426 குழந்தைகள் உட்பட 1429 பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தக்க பாடம் புகட்டும்விதமாக...

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

” முன்னாள் பிரதமருக்கு எதிராகடோனி திரும்பி போ”

தாய்லாந்து சென்றுள்ள இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இங்கிலாந்து- தாய்லாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 2006ம் ஆண்டு முதல் பல விடயங்களில் பிரச்னை நிலவுகிறது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை ஏற்படுத்துவதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சமாதான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கலந்து கொண்டு பேசினார். இதற்காக தாய்லாந்து...

மாப்பிள்ளையின்றி தவிக்கும் கன்னிப்பெண்கள்!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ முறை டேட்டிங் போயும் கூட தங்களுக்கு நல்ல காதலர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் இப்பெண்கள். ஸூ ஜியாஜிக்கு 31 வயதாகிறது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம். ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் வீட்டிலும்,...

திங்கள், 2 செப்டம்பர், 2013

சிரியாவில் போர் வேண்டாம்! உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் அழைப்பு

சிரியாவில் போரினை தடுப்பதற்காக வருகிற 7ம் திகதி உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடந்த பிரார்த்தனைக்குப் பின்னர் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், செப்டம்பர் 7ம் திகதி புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை உண்ணாவிரதம் நடைபெறும். அனைவரும் ஒருங்கிணைவோம், கடவுள் கொடுத்த அமைதி என்ற மாபெரும் பொக்கிஷம் சிதைந்து போகாமலும்,...

முன்னாள் அமைச்சர் வீட்டு நாய்கள் விஷம் வைத்து கொலை

 பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் விலையுயர்ந்த மூன்று நாய்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளன.இது பற்றி அவரது இளைய சகோதரர் காலித் மாலிக் கூறும்போது, சமீபத்தில்தான் இந்த நாய்கள் 36 லட்சம் ரூபாய் செலவில்  ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டன. பஞ்சாப் மாகாணம் சியால்கோட்டிலுள்ள அண்ணனின் வீட்டில் வெள்ளிக்கிழமை அவை இறந்து கிடந்தன. அவற்றுக்கு யாரோ விஷம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார். காவல்துறையினர் சிறப்புப்படை...

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம்! லெபனானுக்கு மக்கள்.

சிரியாவில் ஜனாதிபதி அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர்.சமீபத்தில் போராளிகள் பகுதியில் ஜனாதிபதி படையினர் இரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள், முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவின் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா...

ஜேர்மன் பரிசு அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்தியவருக்கு!

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடெனுக்கு ஜேர்மனி நாட்டு அமைப்பின் ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சங்கமும், அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச வழக்குரைஞர் சங்கத்தின் ஜேர்மனி பிரிவும் சேர்ந்து ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசை 1999ஆம் ஆண்டு உருவாக்கின. இந்த ஆண்டுக்கான இப்பரிசுக்கு அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெர்லினில் வெள்ளிக்கிழமை...